வீட்டில் இந்த பொருட்களை மட்டும் காலியாக வைக்காதீங்க! பணம் தங்கவே தங்காதாம்
வாஸ்து சாஸ்திரத்தினை பொறுத்தவரையில் திசைக்கும் முக்கியத்துவம் உண்டு. நமது வீடு, அலுவலகம் இவைகள் வாஸ்து குறைபாடு இருந்தால், எதிர்மறை ஆற்றல் காணப்படும்.
எதிர்மறை ஆற்றல் இருந்தால் வீட்டில் மகிழ்ச்சி, முன்னேற்றம், செழிப்பு இவை எதுவும் இல்லாமல் காணப்படும். இந்நிலையில் வீட்டில் சில பொருட்களை காலியாக வைத்திருந்தால், மகாலஷ்மியின் அருள் இல்லாமல் போய்விடும். அவை என்ன என்பதை பார்க்கலாம்.
காலியாகை எவற்றினை வைக்கக்கூடாது?
நீங்கள் வைத்திருக்கும் பீரோ, பணப்பை இவற்றில் பணம் அதிகமாக இருந்துகொண்டிருக்க வேண்டும் என்றால், அதனை காலியாக வைக்கக்கூடாது. அவ்வாறு காலியாக வைத்திருந்தால் மகாலட்சுமியின் கோபத்தினை சந்திப்பதுடன், வீட்டில் பொருளாதார பின்னடைவும் ஏற்படும். லட்சுமி தேவியின் கோவம் தவிர்ப்பதற்கு, சிவப்பு துணி ஒன்றில் மஞ்சள், கோமதி சக்கரம், கொஞ்சம் பணம் இவற்றினை பீரோ லாக்கர், பர்ஸ் இவற்றில் வைக்க வேண்டும்.
சிலர் குளியலறையில் குளித்துவிட்டு அங்கு இருக்கும் பக்கெட்டை காலியாக வைத்திருப்பார்கள். இவை உங்களுக்கு வறுமையை ஏற்படுத்துவதுடன், எதிர்மறை ஆற்றலையும் கொண்டு வரும். மேலும் கருப்பு நிறத்தில் உள்ள பொருட்கள், உடைந்த வாலி இவற்றினை பயன்படுத்தக்கூடாது.
இதே போன்று பூஜை அறையில் நீங்கள் வைத்திருக்கும் பாத்திரத்தில் தண்ணீர் நிரம்பி இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் இருந்தால் அது அசுப பலன்களைக் கொடுக்கும். குறித்த பாத்திரத்தில் சிறிது தண்ணீர், கங்கை நீர், துளசி இலைகள் என போட்டு வைத்தால் வீட்டில் செல்வ செழிப்பு ஏற்படும்.
சமையலறையில் அன்னப்பூரணியின் ஆசி நிலைத்திருக்க வேண்டும் என்றால், உணவுப்பொருட்கள் போட்டு வைத்திருக்கும் பாத்திரம் காலியாக இருக்கக்கூடாது. இவை வீட்டில் பணக்கஷ்டத்தையும், மகிழ்ச்சியும் குலைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |