வாஸ்து பார்த்து வீடு அமைப்பதன் அவசியம் இது தானா?
Parigarangal
Astrology
By Kirthiga
வாஸ்து சாஸ்திரம் என்பது கோள்கள் மற்றும் பிற ஆற்றல்களின் ஐந்து கூறுகளை சமநிலைப்படுத்தும் அறிவியல் ஆகும்.
கலை, வானியல் மற்றும் ஜோதிடம் ஆகியவற்றை இணைப்பதன் மூலம் இது வாழிகாட்டுகின்றது.
வீட்டிற்கு வாஸ்து பார்த்து தான் எந்த ஒரு காரியத்தையும் செய்வார்கள்.
வாஸ்து சாஸ்திரத்தின் முக்கியத்துவம்
- தொழில் , கல்வி , மன ஆரோக்கியம், சிறந்த உறவுகள் மற்றும் பல பல்வேறு நன்மைகளை வாஸ்து நம் வாழ்வில் கொண்டு வருகிறது.
-
பிரபஞ்சத்தில் நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றல்கள் உள்ளன.
- இந்த எதிர்மறை ஆற்றல்களை அகற்றி நேர்மறையை அதிகரிப்பதே வாஸ்துவின் சிறப்பியல்பாகும்.
இவ்வாறு இருக்கையில் வீட்டின் வாஸ்து எவ்வாறு அமைய வேண்டும் என்று சில குறிப்புகளை பார்க்கலாம்.
வீட்டிற்கு வாஸ்து பார்த்தல்
- மேற்குத் திசை உயரமாகவும், கிழக்குத் திசை பள்ளமாகவும் இருந்தால் செல்வந்தராக்கி விடும்.
- கிழக்கு திசை மேடாகவும், மேற்கு திசை பள்ளமாகவும் இருந்தால் ஏழையாக்கி விடும்.
- வடக்கு திசை மேடாகவும், தெற்கு திசை பள்ளமாகவும் இருந்தால் வீட்டுத் தலைவனுக்கு திங்கு ஏற்படும்.
- தெற்கு திசை உயரமாகவும் வடக்கு திசை பள்ளமாகவும் இருந்தால் செல்வ வளர்ச்சியடையும்.
- வீட்டின் தென்மேற்கு திசையில் சேமிப்பு அறை, படுக்கை அறைகளை அமைக்க வேண்டும்.
- வீட்டின் தென்கிழக்கில் சமையல் கிழக்கே பார்த்து சமைக்கும் படியாக இருத்தல் வேண்டும்.
- வீட்டின் கிழக்கில் குளியல் அறை அமைத்தல் நல்லது.
- வீட்டில் சாப்பிடுமிடம் மேற்கிலும் சாப்பிடும் போது கிழக்கு திசை பார்த்து சாப்பிட வேண்டும்.
- வீட்டின் வடமேற்கில் தான் தானியக் கிடங்கு இருத்தல் வேண்டும்.
- வீட்டின் வடக்கு திசையில் தான் பணம் எடுத்தல் மற்றும் வைத்தல் செய்தல் வேண்டும்.
-
வீட்டின் வடகிழக்கு திசையில் இறைவழிபாடு மற்றும் தியானம் செய்தல் நல்லது.
-
எதிர்வீட்டின் தலைவாசலுக்கு எதிரில் நம் வீட்டு தலைவாசல் இருக்க கூடாது.
- முன்வாசல் மற்றும் பின்வாசலின் நேர் எதிரில் சூரிய ஒளிப்படும் இடத்தில் துளசி மடம் அமைத்தல் வேண்டும்.
-
வீட்டின் நடுவில் சந்திப்புக் கூடம் இருத்தல் வேண்டும்.
-
வீட்டின் உள்ளே சூரிய ஒளி விழுதல் சிறந்தது.
- மனைப் பொருத்தத்தில் சூத்திரத்திப் பொருத்தத்தில் மரண சூத்திரம் வரக்கூடாது. அப்படி வந்தால் வீட்டு தலைவருக்கு ஆயுள் குறையுமாம்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US