Vastu Tips : வீட்டில் அடிக்கடி சண்டையா? கல் உப்பை இந்த இடத்தில் வைத்தால் போதும்
கணவன் மனைவி இடையே சண்டை வராமல் இருப்பதற்கு வீட்டில் செய்யக்கூடிய சில பரிகாரங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.
இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு என்று தனி சிறப்பு உண்டு. வீட்டில் ஒரு பொருட்களை வெளியே எடுத்துப் போடுவதும், வெளியே இருந்து ஒரு பொருட்களை வீட்டுக்கு கொண்டு வருவது அதிகமாக வாஸ்து பார்க்கப்படுகின்றது.
இந்த வாஸ்து சாஸ்திரங்கள் வீட்டில் உள்ளவர்களின் மீது ஆழமாக தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும் பாதிக்குமாம்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி, கணவன் மனைவி சண்டை வராமல் இருப்பதற்கு செய்ய வேண்டிய பரிகாரத்தைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
image: getty
வீட்டில் அமைதி நிலவ என்ன செய்யலாம்?
வீட்டில் அடிக்கடி சண்டை, கருத்து வேறுபாடு காணப்பட்டால் புத்தர் சிலையை வாங்கி வைக்கவும். ஏனெனில் புத்தர் சிலையானது அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பிரதிபலிப்பதிப்பதுடன், வீட்டில் எப்பொழுதும் அமைதி நிலவுவதுடன், மங்களகரமாகவும் இருக்குமாம்.
வீட்டில் உடைந்த கண்ணாடி இருந்தால் உடனே தூக்கி எரிந்துவிடவும். ஏனெனில் இது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துமாம். அதே போன்று வீட்டில் பல இடங்களில் கண்ணாடி இருந்தால் வீடு அழகாக இருப்பதுடன், நேர்மறை ஆற்றலும் அதிகரிக்கும். ஆனால் கண்ணாடியை வடக்கு திசையில் வைக்க வேண்டும் என்பதை மறந்துவிட வேண்டாம்.
வீட்டில் எதிர்மறையான ஆற்றலை நீக்க கல் உப்பு உதவுகின்றது. அறையின் ஒரு மூலையில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு வைக்கவும். இதனால் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். ஆனால் மாதம் ஒருமுறை உப்பை மாற்ற வேண்டும்.
வீட்டில் சண்டையை தீர்க்க கற்பூரம் உதவியாக இருக்கும். இரவு தூங்கும் முன்பு கற்பூரத்தை பித்தளை விளக்கில் வைத்து எரிய வைக்கவும். இவ்வாறு செய்தால் சண்டைகள், சர்ச்சரவுகள் நீங்கி, அமைதி நிலவும். வாரத்தில் எதாவது ஒரு நாளில் கற்பூரத்தை ஏற்றி புகையை வீடு முழுவதும் பரப்ப செய்தால் அமைதி நிலவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |