சாலையில் இந்த பொருட்களை மறந்தும் தாண்டாதீங்க.. ஆபத்து உங்களை தொடரும்
பொதுவாக சாலையில் நாம் நடந்து செல்லும் பொழுது, பலவிதமான பொருட்களை கடந்து போக வேண்டிய நிலை ஏற்படும்.
சில நேரங்களில் நாம் கடந்து போகும் பொருட்களால் எதிர்மறையான சக்திகள் நம்மை தொடர வாய்ப்பு உள்ளது. இதனால் வீட்டில் கஷ்டம், துக்கம், கண்ணீருடன் கூடிய சில விடயங்கள் நடக்கலாம்.
ஜோதிட சாஸ்த்திரத்தின்படி, சாலையில் கிடக்கும் சில பொருட்களை எடுப்பது மங்களம் உண்டாகும் என எமது முன்னோர்கள் நம்புகிறார்கள்.
நம்பிக்கையின் படி, சாலையில் கிடக்கும் சில பொருட்களை நாம் கடக்கக்கூடாது. சாலையில் கிடக்கும் இந்தப் பொருட்களைக் கடப்பது வாழ்க்கையில் பிரச்சினைகளை உண்டுபண்ணும்.
அந்த வகையில், சாலையில் கிடக்கும் சில பொருட்களை கடந்து செல்வதால் என்னென்ன ஆபத்துக்கள் ஏற்படும் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
1. சாம்பல்
ஹோமம் - ஹவானா செய்யும் பொழுது வீட்டு அடுப்பில் உள்ள சாம்பலை சாலையில் வீசப்படுவது வழக்கம். இதனை பலமுறை கவனித்தும் கண்டுக் கொள்ளாமல் அதனை மிதித்துக்கொண்டு கடந்து செல்வோம்.
இது வீட்டுக்கு கஷ்டங்களை கொண்டு வரும். ஏனெனின் சாம்பல் நெருப்பினால் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதால் கடவுளாக பார்க்கப்படுகிறது. இதனால் இதனை மிதிப்பது, கடப்பது பிரச்சினையை உண்டுபண்ணும்.
2. எலுமிச்சை மற்றும் மிளகாய்
வாகனங்கள் மற்றும் புதிய வீடுகளில் எலுமிச்சை மற்றும் மிளகாய் கட்டுவார்கள். இதனை கண்ணில் படாமல் வீசுமாறு கூறுவார்கள். அப்படி வீசப்படும் எலுமிச்சை மற்றும் மிளகாய் எதிர்மறையை சக்தியை ஈர்க்கும் ஆற்றல் கொண்டது. எனவே, சாலையில் எலுமிச்சை மற்றும் மிளகாய்கள் கிடப்பதைக் கண்டால் அதைக் கடக்க வேண்டாம்.
3. தலைமுடி
வெளியில் முக்கியமான வேலைகளுக்கு செல்லும் பொழுது சாலையில், தலைமுடி இருப்பதை பார்த்தால் அது உங்களின் வேலையை தடைகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது என்பதனை உணர்த்துகிறது. இது மிகவும் மோசமான அறிகுறி என்பதனை பலரும் அறிந்திருக்கமாட்டார்கள்.
தப்பிதவறி சாலையில் தலைமுடி கிடக்கும் பொழுது கையால் எடுப்பதை தவிர்க்கவும். மாறாக சாலையில் முடி இருப்பதை கண்டால் அதனை கடக்காமல் வேறு வழியில் செல்வது சிறந்தது.
4. குளிக்கும் தண்ணீர்
குளிக்கும் தண்ணீரை சாலையில் இருந்தாலும், வீட்டில் குளிக்கும் நீர் சாலையின் குறுக்கே ஓடிக்கொண்டிருந்தாலும், அத்தகைய நீரை கடக்கக்கூடாது. அப்படிப்பட்ட குளியல் நீரை மறந்துவிட்டு கடந்தால் அது நமது நிதி நிலைமையில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |