வியாழக்கிழமையில் கையில் எலுமிச்சை பழம் வைத்து வேலை செய்தால் என்ன நடக்கும்?
போட்டிகள், பொறாமைகள் நிறைந்த இந்த காலக்கட்டத்தில் ஒருவருக்கு வேலை கிடைப்பது என்பது அவ்வளவு சாதாரணமான விடயமாக இருக்காது.
அவ்வாறு வேலை கிடைத்தாலும் அதனை தக்க வைத்து கொள்வது தான் இந்த வாழ்க்கையில் மிகப் பெரிய டாஸ்க்காக இருக்கின்றது.
நல்ல வேலையாகவும் இருந்து கையில் நிறைய பணமும் கிடைத்தால் இந்த உலகின் அதிஷ்சாலி நீங்கள் தான்.
வேலை நல்ல வேலை ஆனால் சம்பளம் அவ்வளவாக இல்லை என புலம்பும் பக்தர்களுக்கான பதிவு தான் இது.
இதனை தொடர்பில் மேலதிகமாக தொடர்ந்து தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
1. வேலை கிடைக்க பரிகாரம்
வேலை கிடைக்க வேண்டும் என்றால் நன்றாக குளித்து விட்டு வியாழக்கிழமைகளில் இதனை செய்ய வேண்டும். முழு மஞ்சள் நிறத்தில் உள்ள எலுமிச்சை பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்த பழத்தை கையில் வைத்து கொண்டு வீட்டிலுள்ள அனைத்து இடங்களையும் சுற்றி வர வேண்டும். இவ்வாறு வந்து கடைசியாக உங்களின் தலையை 3 முறை சுற்ற வேண்டும்.
தொடர்ந்து பழத்தை மூக்கின் முன் வைத்து அதன் மேல் உங்கள் மூச்சு காற்று படும்படி வைத்திருக்கவும்.
இதற்கடுத்தப்படியாக யாரிடமும் எதுவும் கூறாமல் நான்கு பாதைகள் சந்திக்கும் சந்தியில் பழத்தை இறைவனை நினைத்து போட்டு விட்டு திரும்பி பார்க்காமல் வீடு திரும்பினால் நினைத்த காரியம் உடனே நடக்கும்.
அடுத்து என்ன செய்ய வேண்டும்?
வீட்டில் நுழையும் போது தலையில் தண்ணீர் தெளித்து விட்டு நுழைய வேண்டும். உங்களிடம் இருக்கும் தீய எண்ணங்கள் கூட இருந்த இடம் தெரியாமல் போய் விடும்.
பின்னர் வியாழன் மற்றும் சனிக்கிழமை இந்த இரண்டு நாளில் ஏதேனும் ஒரு நாளில் ஆஞ்சநேயருக்கு இரண்டு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.
இதனை தொடர்ந்து நீங்கள் 7 வாரங்களுக்கு செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் உங்களுக்கு நல்ல வேலை கிடைப்பது உறுதி!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |