தப்பித் தவறிக்கூட வியாழனில் இதை செய்திடாதீங்க
பொதுவாக வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக்கு உரியது என்று கூறப்படுகிறது. அப்படிப் பார்க்கும்பொழுது வியாழக்கிழமை விஷ்ணு பகவானுக்கு உரிய தினமாக கருதப்படுகிறது.
வியாழக்கிழமைகளில் குறிப்பிட்ட சில விடயங்களை செய்வதன் மூலம் விஷ்ணு பகவானின் கோபத்துக்கு ஆளாக வேண்டிவரும் என கூறப்படுகிறது. அது என்னென்னவென்று பார்ப்போம்...
துணி துவைத்தல்
வியாழக்கிழமையில் துணி துவைப்பதும் வீட்டை துடைப்பதும் அவ்வளவு நல்ல காரியம் அல்ல என்று கூறப்படுகிறது. அவ்வாறு இதுபோன்ற விடயங்கள் செய்யும்பொழுது அது வீட்டிலுள்ள குழந்தைகளின் கல்வியை பாதிப்பதோடு, வீட்டின் செழிப்பையும் பாதிக்கிறது.
நகம் வெட்டாதீர்கள்
நகம் வெட்டுதல், ஷேவிங் செய்தல், தலைமுடி வெட்டுதல் போன்றவற்றை வியாழக்கிழமைகளில் செய்யவே கூடாது. அவ்வாறு செய்தால் வீட்டிலுள்ள ஒருவரது ஆயுள் குறையுமென்று கூறப்படுகிறது.
ஒட்டடை எடுக்கக்கூடாது
வீட்டில் சிலந்தி வலைகள், ஒட்டடைகள் இருப்பது இயல்புதான். இதை உடனுக்குடன் நீக்கிவிடவேண்டும். ஆனால், எக் காரணத்தைக் கொண்டும் வியாழக்கிழமைகளில் அதை நீக்கிவிடக் கூடாது என கூறப்படுகிறது.
குளித்தல்
திருமணமான பெண்கள் வியாழக் கிழமைகளில் குளிப்பது அவளது கணவனை எதிர்மறையாக பாதிக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.