வீடு கட்டுவதற்கு சிறந்த மாதம்... இந்த மாதத்தில் வீடு கட்டினால் என்ன பலன் தெரியுமா?
பொதுவாக நம் வீட்டில் நமக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் நம் வீட்டு முதியவர்களுக்கு எதற்கு எடுத்தாலும் வாஸ்து பார்ப்பது வழக்கம்.
இந்த வழக்கத்தை அவர்கள் காலம் காலமாக பின்பற்றிதான் பல வேலைகளை செய்து அதில் வெற்றி கண்டதால் அதனை அடுத்த தலைமுறைக்கும் கொடுத்து வருகிறார்கள். என்னதான் பெரிய பெரிய படிப்பெல்லாம் படித்து உயர்ந்தாலும் இந்த தலைமுறையினருக்கும் வாஸ்து சாஸ்திரம் மீது அதிக நம்பிக்கை இருக்கிறது.
அப்படிதொட்டதற்கெல்லாம் வாஸ்து பார்ப்பவர்கள் தனது வாழ்வில் சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவில் இருப்பவர்கள் இந்த வாஸ்து பற்றி நிச்சயம் யோசிப்பார்கள். அப்படியானவர்கள் எந்த மாதத்தில் வீடு கட்டவேண்டும், எந்த திசையில் வீடு கட்டவேண்டும் என்று வாஸ்துப் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.
எந்த மாதத்தில் வீடு கட்டலாம்
- தை மாதத்தில் வீடு கட்ட நினைத்தால் அதிக கடன் தொல்லையும், அக்கினி பயமும் அதிகரிக்கும்.
- சித்திரை மாதத்தில் வீடு கட்டினால் அதற்கு வீண் செலவுகள் ஏற்படும்.
- வைகாசி மாதத்தில் வீடு கட்டினால் நீங்கள் எடுக்கும் முயற்சிகளும் செயல்களும் வெற்றி பெறும்.
- ஆனி மாதத்தில் வீடு கட்டினால் தினமும் மரண பயம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.
- ஆடி மாதத்தில் வீடு கட்டினால் உங்கள் வீடுகளில் வளர்க்கும் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படும்.
- ஆவணி மாதத்தில் வீடு கட்ட நினைத்தால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.
- புரட்டாசி மாதத்தில் வீடு கட்டினால் குடும்ப உறுப்பினர்களுக்கு நோய்கள் வரும்.
- ஐப்பசி மாதத்தில் வீடு கட்டினால் சொந்த உறவினர்களால் கலகம் ஏற்படும்.
- கார்த்திகை மாதம் வீடு கட்டினால் உங்களுக்கு லட்சுமியின் அருள் கொட்டும்.
- மார்கழியில் வீடு கட்டினால் வீட்டில் விருத்தி இல்லாமல் அடுத்தடுத்து தடைகள் வந்து கொண்டிருக்கும்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |