Vastu Tips: ஒருவர் எந்த திசையில் உறங்க வேண்டும்?

DHUSHI
Report this article
இந்து மத வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீடு மற்றும் அலுவலகம் இவை இரண்டும் சமநிலையில் இருக்க வேண்டும்.
வாஸ்து சாஸ்த்திரத்தின் கூறப்பட்ட விடயங்களை கடைப்பிடிக்காத வீடுகளில் கஷ்டங்களே நிலைத்திருக்கும்.
மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ நினைப்பவர்கள் இரவு தூங்கும் பொழுது சில திசைகளில் தூங்குதல் ஆகாது.
அந்த வகையில் எந்த திசையில் இரவு தூங்கினால் அந்த நாள் சிறப்பாக அமையும் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
எந்த திசையில் தூங்க வேண்டும்?
1. வாஸ்து சாஸ்திரத்தின் படி தெற்கு திசை- வடக்கு திசை நோக்கிய கால்களை நீட்டி படுக்கவும். இப்படி தூங்குவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஒருவர் இந்த திசையில் தூங்கும் பொழுது வாழ்க்கை மற்றும் வேலையில் செழிப்பு உண்டாகும்.
2. வாஸ்து சாஸ்திரத்தின் படி, மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் கிழக்கு நோக்கி- மேற்கு நோக்கி தூங்கினால் மிகவும் நல்லதாக பார்க்கப்படுகிறது. இந்த திசையில் தூங்கினால் மனமம் அமைதியாக இருக்கும்.நினைவாற்றலும் அதிகமாக இருக்கும்.
3. பெரும்பாலும் குழந்தைகளை அவர்கள் தூங்கும் திசையில் பெற்றோர்கள் விட்டுவிடுவார்கள். அப்படி அல்லாமல் அவர்கள் என்ன பருவத்தில் இருக்கிறார்களோ அதற்கு ஏற்ப திசையில் படுக்க வைப்பது அவசியம். மன அழுத்தம் தூக்கமின்மை பிரச்சனையிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
4. வாஸ்து சாஸ்திரத்தின் படி, மேற்கு - கிழக்கு நோக்கி தூங்கும் ஒருவருக்கு நல்ல தூக்கம் கிடைக்கும். இதனால் அவர்கள் காலையில் எழுந்து அவர்களின் வேலைகளையும் சரிவர செய்து கொள்ள முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
