வீட்டில் மணி பிளாண்ட் வளர்த்தால் செல்வம் பெருகுமா? வாஸ்து சொல்லும் சாஸ்திரம் என்ன
பொதுவாகவே பெரும்பாலானோர் வீடுகளை அழகாக்கவும், வீட்டுத்தோட்டமாக மாற்றவும் சில செடிகளை வீட்டிற்குள் வீட்டிற்கு வெளியிலும் வளர்ப்பதுண்டு.
அப்படி வீடுகளில் வளர்க்கும் செடிகளில் மணி பிளாண்ட் முக்கியத்துவம் பெருகிறது. இந்த மணி பிளாண்டை வீடுகளில் வளர்க்கும் போது பல விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று வாஸ்து சொல்கிறது.
மணிபிளாண்ட் வளர்ப்பதன் நன்மைகள்
வீடுகளில் மணி பிளாண்ட் வளர்ப்பதன் மூலம் நிதி நெருக்கடி, கடன் பிரச்சினைகள் இல்லாமல் செல்வச் செழிப்போடு வாழலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
மேலும், மணிபிளாண்ட் வளர்த்தால் சொத்து, சுகம், ஆரோக்கியம், சந்தோஷம் என்பன நிரம்பி வழியும்.
அது மட்டுமில்லாமல் இதனை தென்கிழக்கு திசையில் வைத்தால் பாஸிடிவ் எனர்ஜி கிடைக்கும். இது வீட்டை தூய்மையாகவும் குளிர்ச்சியாகவும் வைக்கிறது மணிபிளாண்ட்
எப்படி வளர்க்க வேண்டும்
மணி பிளாண்டை வீடுகளில் வளர்த்தால் கிழக்கு-மேற்கு திசையில் வைக்க கூடாது இதனால் வீட்டில் சிக்கல் அதிகமாகும்.
இந்த செடியை தென்கிழக்கு திசை நோக்கி தான் வளர்க்க வேண்டும் ஏனெனில் விநாயகப் பெருமான் தென்கிழக்கு திசையின் அதிபதியாக இருப்பதால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் குறையும்.
மணி பிளாண்ட் இலைகள் மற்றும் கிளைகள் காய்ந்தால் வெட்டி விடவேண்டும் ஆனால் இதனை வீட்டில் இருப்பவர்கள் வெட்டக் கூடாது.
இந்த செடிக்கு தண்ணீர் ஊற்றும் போது வடிகட்டிய நீரைதான் ஊற்ற வேண்டும். தண்ணீர் ஊற்றும் போது இலைகளில் தண்ணீர் தெளித்து விடவேண்டும்.
மணி பிளாண்டை வீட்டிற்குள் வெளியில் வைக்காமல் வீட்டிற்குள் வைக்க வேண்டும் வீட்டிற்குள் வைத்தால் தான் நேர்மறை ஆற்றல் பெருகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |