வீட்டில் மணி பிளான்ட் வளர்க்கிறீர்களா? அப்போ நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய வாஸ்து டிப்ஸ்
பொதுவாகவே பெரும்பாலானோர் வீடுகளை அழகாக்கவும், வீட்டுத்தோட்டமாக மாற்றவும் சில செடிகளை வீட்டிற்குள் வீட்டிற்கு வெளியிலும் வளர்ப்பதுண்டு. அப்படி வீடுகளில் வளர்க்கும் செடிகளில் மணி பிளாண்ட் முக்கியத்துவம் பெருகிறது.
இந்த மணி பிளாண்டை வீடுகளில் வளர்க்கும் போது பல விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று வாஸ்து சொல்கிறது.
மணிபிளாண்ட் வளர்ப்பதன் நன்மைகள்
வீடுகளில் மணி பிளாண்ட் வளர்ப்பதன் மூலம் நிதி நெருக்கடி, கடன் பிரச்சினைகள் இல்லாமல் செல்வச் செழிப்போடு வாழலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது. மேலும், மணிபிளாண்ட் வளர்த்தால் சொத்து, சுகம், ஆரோக்கியம், சந்தோஷம் என்பன நிரம்பி வழியும். அது மட்டுமில்லாமல் இதனை தென்கிழக்கு திசையில் வைத்தால் பாஸிடிவ் எனர்ஜி கிடைக்கும். இது வீட்டை தூய்மையாகவும் குளிர்ச்சியாகவும் வைக்கிறது மணிபிளாண்ட்
படுக்கையறையில் மணி பிளான்ட் வைத்தால்
1. படுக்கையறையில் மணி பிளான்ட் வைப்பதற்கான சிறந்த திசைகள் கிழக்கு, தெற்கு, வடக்கு மற்றும் தென்கிழக்கு ஆகும். மேற்கு மற்றும் தென்மேற்கு திசைகளை முற்றிலும் தவிர்க்கவும்.
2. மணி பிளான்ட் இரவில் கார்பன் டை ஆக்சைடை வெளியிடும். எனவே, உங்கள் படுக்கையில் இருந்து ஐந்து அடி தூரத்தில் செடியை வைப்பது நல்லது.
3. அறையில் ஈரப்பதம் அளவு சிறந்ததாக இருக்க வேண்டும். ஏர் கண்டிஷனிங் உபகரணங்களை நீண்ட நேரம் பயன்படுத்தினால் மணி பிளான்ட் சேதமாகும்.
4. மணி பிளான்ட் செடியை வளர்ப்பதற்கு தண்ணீருக்குப் பதிலாக மண்ணைப் பயன்படுத்தினால், வேர்கள் விரிந்து வளர போதுமான இடத்தை உறுதி செய்யுங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |