வீட்டில் காலணியை எந்த திசையில் வைக்க வேண்டும்? தெரிந்துக் கொள்ள வேண்டிய வாஸ்து டிப்ஸ்
பொதுவாக நம் வீட்டில் நமக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் நம் வீட்டு முதியவர்களுக்கு எதற்கு எடுத்தாலும் வாஸ்து பார்ப்பது வழக்கம்.
இந்த வழக்கத்தை அவர்கள் காலம் காலமாக பின்பற்றிதான் பல வேலைகளை செய்து அதில் வெற்றி கண்டதால் அதனை அடுத்த தலைமுறைக்கும் கொடுத்து வருகிறார்கள்.
என்னதான் பெரிய பெரிய படிப்பெல்லாம் படித்து உயர்ந்தாலும் இந்த தலைமுறையினருக்கும் வாஸ்து சாஸ்திரம் மீது அதிக நம்பிக்கை இருக்கிறது.
அப்படி நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் நமது காலணிகளை வீட்டில் எங்கு வைக்க வேண்டும், எங்கு வைத்தால் செல்வம் செழிக்கும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
காலணிகளை எங்கு வைக்கவேண்டும்
நீங்கள் பயன்படுத்தும் காலணிகளை தலைகீழாக வைத்தால் அது ஒரு அபசகுணம் மேலும், குடும்ப பிரச்சினைகள் ஏற்படும்.
உங்கள் காலணிகளை வீட்டில் வடக்கு அல்லது கிழக்கு திசை வைக்க கூடாது ஏனெனில் இது வீட்டிற்கு எதிர்மறை சக்தியை அதிகரிக்கும்.
வடக்கு அல்லது கிழக்கு திசையில் காலணிகளை கழற்றினால் செல்வம் கொடுக்கும் அன்னலட்சுமிக்கு கோபத்தை ஏற்படுத்தும் இதனால் வீட்டின் பொருளாதார நிலைமை மோசமடையும்.
வாஸ்து படி காலணிகள் வைத்திருக்கும் அலுமாரி எப்போதும் வீட்டில் தெற்கு அல்லது மேற்கு திசையில் தான் வைக்க வேண்டும்.
வீட்டின் பிரதான வாசலில் வைத்து காலணிகளை கழற்றக் கூடாது மாறாக தெற்கு அல்லது மேற்கு திசையில் தான் கழற்ற வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |