சூரியன் மறைந்தப் பிறகு வீடுகளில் செய்யக் கூடாதவை...! வீட்டில் செல்வம் சேராதாம்
பொதுவாக நாம் எதற்கு எடுத்தாலும் வாஸ்து பார்ப்பது வழக்கம். இந்த வழக்கத்தைப் பின்பற்றி தான் பலரும் பல வேலைகளை செய்வார்கள்.
அதே விடயத்தை எமது முன்னோர்களும் அடிக்கடி சொல்லுவார்கள் இந்த விடயத்தை இந்த நேரத்தில் செய்யக்கூடாது என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.
வாஸ்து சூரியன் மறைந்த பிறகு சில விடயங்களை செய்யவே கூடாதாம் அப்படி செய்தால் மகாலட்சுமி வீட்டில் தங்க மாட்டாளாம் மேலும், வீட்டைச் சுற்றி எதிர்வினைகள் சூழ்ந்து விடுமாம்.
செய்யக் கூடாதவை
வாஸ்துப்படி சூரியன் மறைந்த பிறகு துணிகளை துவைக்க கூடாது ஏனெனில் துணிகளை துவைப்பதனாலும், காய வைப்பதனாலும் ஆடைகளில் எதிர்மறை ஆற்றல்கள் நுழைந்து விடுகிறது. அதனால் அதனை அணியும் போதும் அது நம்மையும் சூழ்ந்துக் கொண்டு ஆரோக்கியத்தையும் கெடுக்கிறது.
சூரிய மறைவிற்குப் பிறகு மிச்சமான உணவுகளை திறந்து வைக்க கூடாது ஏனெனில் இதனால் மகாலட்சுமி அதிக கோபம் கொள்வாராம் இது பல பிரச்சினைகளையும் ஏற்படுத்துமாம்.
பொதுவாகவே மாலையில் வீடுகளை சுத்தம் செய்யக் கூடாது, வீட்டில் வளர்க்கும் கால்நடைகளையும் செல்லப்பிராணிகளையும் வெளியே விடக்கூடாது இதனால் நீங்கள் செல்வங்களை இழந்து ஏழையாகும் நிலைமை ஏற்படுமாம்.
வாஸ்துப்படி சூரியன் மறைந்த பிறகு குளிக்க கூடாது ஏனேனில் மகாலட்சுமி கோபம் கொண்டு வீட்டிலிருந்து வெளியேறிவிடுவாராம் இதனால் அந்த வீட்டில் இருப்பவர்கள் வறுமையை மாத்திரம் தான் சந்திப்பார்களாம்.