கணவன்- மனைவிக்குள் சண்டையை மூட்டி விட்டு வேடிக்கை பார்க்கும் வாஸ்து கோளாறு- உடனே சரி பண்ணுங்க!
பொதுவாக திருமணம் என்பது மனிதர்களுக்கு கிடைத்த அற்புதமான பந்தமாக பார்க்கப்படுகின்றது.
இந்த பந்தத்தால் ஆணும் பெண்ணும் உடலாலும் ஆன்மாவாலும் இணைகின்றனர். இந்த உறவில் அடிக்கடி சண்டைகள் வர வாய்ப்பு இருக்கின்றது.
இதற்கு அவர்கள் ஏகப்பட்ட காரணங்கள் சொன்னாலும் சண்டை சச்சரவுகளின்றி மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வீட்டின் வாஸ்து டிப்ஸில் சில விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும்.
அந்த வகையில் திருமண வாழ்க்கையை மேம்படுத்தும் சில வாஸ்து குறிப்புக்களை தொடர்ந்து பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
திருமண வாழ்க்கையை மேம்படுத்தும் வாஸ்து டிப்ஸ்
1. தம்பதிகள் இருக்கும் படுக்கையறையில் எப்போதும் படுக்கையை தென்மேற்கு திசையில் போட வேண்டும். இப்படி படுத்து உறங்குவதால் தம்பதிகளின் மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.
2 மஞ்சள், வெளிர் பச்சை, வெள்ளை, இளஞ்சிவப்பு, வெளிர் நீலம் ஆகிய வண்ணங்களால் மாத்திரம் படுக்கையறைக்கு வண்ணம் பூச வேண்டும். இது நேர்மறையான ஆற்றலை அறைக்குள் கொண்டு வரும். தம்பதிகள் மத்தியில் ஒரு அமைதி இருக்கும்.
3. எவ்வளவு சண்டையாக இருந்தாலும் கணவனும் மனைவியும் ஒரே கட்டிலில் தான் உறங்க வேண்டும். தனித்தனியாக படுப்பது வேறு விதமான மனக்கஷ்டங்களை ஏற்படுத்தும்.
4. உறங்குவதற்கு இரும்பு கட்டிலை பயன்படுத்துவதை விட மரக் கட்டிலைப் பயன்படுத்துவது நல்லது. இது உங்களின் வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கங்களை குறைக்கும். அத்துடன் நம்பிக்கையான எண்ணங்களை தரும்.
5. கணவன் - மனைவி சேர்ந்து தூங்கும்போது தலையை தெற்கு நோக்கியும், கால்களை வடக்கு நோக்கியும் வைத்து உறங்க வேண்டும். இது தம்பதிகளுக்கிடையே நல்ல உறவை வளர்க்கும்.
6. சமையலறையை ஒருபோதும் வடகிழக்கு திசையில் அமைக்க வேண்டாம். இது வீட்டின் நேர்மறையான ஆற்றல்களை விரட்டியடிக்கும்.
7.வீட்டின் தென்மேற்கு திசையில் நிலத்தடி நீருக்கான தொட்டியை வைக்க வேண்டாம். இது கணவன் - மனைவி உறவை பாதிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |