அள்ள அள்ள குறையாத பணவரவு வேண்டுமா? அப்போ இந்த பரிகாரம் செய்ங்க- பலன் நிச்சயம்
சாஸ்திரங்களின் படி, ஒருவர் இந்து கலாச்சாரத்தை பின்பற்றும் பொழுது அவர்கள் நிறைய பரிகாரங்கள் செய்வார்கள். இது அவர்களின் நம்பிக்கையாக உள்ளது.
கடவுள் வழிபாட்டை புனிதமாக பார்க்கும் இந்து சாஸ்த்திரத்தின்படி, சில வழிபாடுகள் செய்யும் பொழுது அதன் பலன் நாம் நினைத்ததை விட இருமடங்காக கிடைக்கும்.
ஒவ்வொரு வீட்டிலும் லட்சுமி தேவியின் அருள் இருக்க வேண்டும். அப்போது தான் அந்த வீட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும்.
அந்த வகையில், தீராத பணக்கஷ்டத்தில் இருப்பவர்கள் கடவுளிடம் முழு பொறுப்பை ஒப்படைத்து சில பரிகாரங்கள் செய்யும் பொழுது அதிலிருந்து சீக்கிரம் வெளியில் வர முடியும்.
அப்படியாயின், சாஸ்த்திரங்களில் கூறப்பட்டது போன்று என்னென்ன பரிகாரங்கள் செய்தால் பணக்கஷ்டங்கள் குறையும் என பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
பணவரவு அதிகரிக்க டிப்ஸ்

1. பணக்கஷ்டம் அதிகம் உள்ளவர்கள் தினமும் உங்கள் வீட்டின் நுழைவாயிலில் அருகில் ஒரு நெய் விளக்கு ஏற்றி வைக்கவும். இப்படி செய்தால் உங்களின் பணக்கஷ்டங்கள் குறையும்.
2. வீட்டில் நேர்மறையான ஆற்றல்களின் ஆதிக்கம் குறையும் பொழுது பணக்கஷ்டங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அப்படி இருந்தால் அதனை அதிகரிக்க தினமும் உங்கள் நுழை வாயிலில் விளக்கேற்றி வணங்கவும்.

3. தினமும் வீட்டின் வடகிழக்கு மூலையில் விளக்கேற்றி வைப்பதால் வீட்டில் மங்கள செயல்கள் அதிகமாகும். ஏனெனின் வடகிழக்கு திசை செல்வத்தை அதிகரிக்கிறது.
4. தினமும் மாலையில் சரியான திசையில் விளக்கு ஏற்றி வழிபாடுகள் செய்யும் ஒருவருக்கு லட்சுமி தேவியின் அருள் இருக்கும். அமைதியும் செழிப்பும் இவர்களுக்கு அதிகமாகவே இருக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |