வீட்டில் மீன்தொட்டியை இந்த திசையில் வைத்தால் பணத்திற்கு பஞ்சமே வராதாம்
மீன்தொட்டி எல்லோரது வீட்டிலும் இருக்கும். இந்த மீன்தொட்டிகள் வீட்டை அலங்கரிப்பது மட்டுமல்லாமல் இதை பார்ப்பதற்கு மனதிற்கு நிம்மதியையும் தருகிறது.
வீட்டில் உள்ள நெகடிவ் எனர்ஜியை வெளியேற்ற நீர் அமைப்புக்கள் பல வீடுகளில் வைத்திருப்பது வழக்கம். நீரேற்றத்தில் ஒரு அங்கமாக வருவது மீன்தொட்டியும் ஒன்றாகும்.
சில வீடுகளில் மீன்தொட்டி சின்னதாகவோ அல்லது பெரிதாகவோ வைத்திருப்பார்கள்.
அந்த வகையில் வாஸ்த்து சாஸ்திரப்படி வீட்டில் மீன்தொட்டியை எந்த திசையில் வைத்தால் செல்வவம் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மீன்தொட்டி
வாஸ்து சாஸ்திர முறைப்படி உயிரோட்டம் நிறைந்திருக்க வீட்டின் தென்கிழக்கு பகுதியின் மூலையில் நீரோட்டம் நிறைந்திருக்க வேண்டும்.
நாம் அதிகமாக பயன்படுத்துவது நமது வீட்டில் இருக்கும் வரவேற்புக்காக இருக்கும் மண்டபம் தான்.
இந்த வரவேற்பு மண்டபத்தில் வடக்கு, கிழக்கு அல்லது வட கிழக்கு திசையில் மீன்தொட்டியை வைத்தால் அது நமக்கு நிதி சம்பந்தமாக இருக்கும் பிரச்சனைகளை நீக்கி நிதி நிலமையை பெருக்கி தரும்.
உங்கள் வீட்டில் தலைவாசலுக்கு இடது புறமாக நீங்கள் மீன்தொட்டியை வைத்தால் வீட்டில் எப்போதும் அன்பு பெருகும். ஆனால் மீன் தொட்டியை சில இடங்களில் வைக்க கூடாது.
வீட்டின் படுக்கையறை, சமையலறை, வீட்டின் நடுக்கூடம், வெயில் படும் ஜன்னல்கள், தெற்கு திசை, படுக்கட்டுகளுக்கு கீழ், ஏசி, டிவி போன்ற மின்சாதனங்களுக்கு அருகில் மீன் தொட்டியை வைக்கக் கூடாது.
மீன் தொட்டியில் இருக்கும் தண்ணீரை ஒவ்வொரு நாளும் மாற்ற கூடாது. இதை வாரத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும். மீன் தொட்டியில் அதிஸ்டமான மீன்களை வளர்ப்பதால் நமது மனநிலை சீராக அமைவதோடு வீட்டில் மகிழ்ச்சி நிலையாக இருக்கும்.
மீன் தொட்டி வீட்டில் வைத்திருப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் அது வெற்றியில் தான் முடியும்.