உங்களிடம் கார் இருக்கிறதா? அப்போ கண்டிப்பா இந்த வாஸ்து சாஸ்திரங்களை மறக்காதீங்க
பொதுவாக நாம் எதற்கு எடுத்தாலும் வாஸ்த்து பார்ப்பது வழக்கம். இந்த வழக்கத்தைப் பின்பற்றி தான் பலரும் பல வேலைகளை செய்வார்கள்.
அப்படி வீடுகளில் வைக்கும் காலணிகளில் இருந்து சுவர்களில் மாட்டும் புகைப்படங்கள் வரைக்கும் அனைத்துக்கும் வாஸ்து என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.
அந்தவகையில், வீடுகளில் கார் வைத்திருப்பவர், கார் ஓட்டுபவர்களுக்கும் வாஸ்து சாஸ்திரங்கள் இருக்கிறது. அவற்றை தெரிந்துக் கொண்டு அதன்படி நடந்தால் சில பாதிப்புக்களை தவிர்க்கலாம்.
காரில் வாஸ்து சாஸ்திரம்
தொழிலதிபர்கள் காரை நிறுத்தும் போது வடக்கு திசை நோக்கி நிறுத்த வேண்டும்.
அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் வடக்கு திசையில் காரை நிறுத்துவது நல்லது.
வீட்டில் காரை நிறுத்தும் போது தென்கிழக்கு அல்லது வடமேற்கு பகுதியில் நிறுத்த வேண்டும்.
வடகிழக்கு பக்கம் காரை நிறுத்தல் கூடாது
வாஸ்துபடி காரில் சிறிய விநாயகர் சிலையை வைத்தால் கேதுவால் ஏற்படும் இடையூறுகள் நீங்கும்.
காரில் கருப்பு ஆமை சிலையை வைத்தால் பாசிட்டிவ் எனர்ஜி அதிகமாகும்.
காரில் டேஷ் போர்டில் படிகங்களை வைத்தால் மங்களகரமானதாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |