Vastu Tips: துளசி செடியில் இந்த தவறை செய்யாதீங்க... வீட்டிற்கு துரதிர்ஷ்டம் வருமாம்
இந்து மதத்தில் புனிதமாக பார்க்கப்படும் துளசி செடியை எவ்வாறு பராமரித்தால் வீட்டில் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
துளசி
இந்து மத சாஸ்திரப்படி துளசி செடிக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. ஆயுர்வேதத்திலும் துளசி ஒரு சிறந்த மருத்துவ மூலிகையாகவும் கருந்தப்படுகிறது.
துளசி செடியை கவனமாக வீட்டில் வளர்த்து வந்தாலும் கால நிலை மாற்றத்தினால் வாடி அழுக ஆரம்பித்துவிடும்.
குறிப்பாக, கோடை மற்றும் குளிர்காலங்களில் செடி வறண்டு போகக்கூடும். ஆனால் துளசி செடியினை நீங்கள் பராமரிப்பதைக் கொண்டு உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று கூறப்படுகின்றது.
துளசி செடியை சரியான திரைசயில் வைப்பது அவசியமாகும். இது நேர்மறை ஆற்றலை அதிகரிக்கின்றது. அதே போன்று துளசியை பசுமையாக வைத்திருந்தால் அந்த வீட்டில் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது என்று கூறப்படுகின்றது.
எந்த திசையில் வைக்கலாம்?
துளசி செடியினை வீட்டின் முற்றத்தில், மையத்தில், வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் வைக்கலாம். பால்கனியில் அல்லது ஜன்னலில் துளசி செடியை வைக்க விரும்பினாலும் மேலே கூறப்பட்டுள்ள திசையில் வைக்க வேண்டும்.
தெற்கு திசையில் துளசியை வைக்கக்கூடாது. தெற்கு திசை எமனின் திசையாகவு கருதப்படுவதுடன், முன்னோர்களின் கோபத்திற்கும், லட்சுமி தேவியின் கோபத்திற்கும் ஆளாவீர்கள். இதனால் வீட்டில் வறுமை அதிகமாகும்.
வீட்டில் துளசி செடி இருந்தால் செல்வம், செழிப்பு, மகிழ்ச்சி, அமைதி கிடைப்பதுடன், துளசி வைத்திருக்கும் இடத்தினை சுத்தமாக வைப்பது அவசியமாகும். குப்பை போன்ற அசுத்தமான பொருட்கள் வைக்கக்கூடாது.
துளசியை தரையில் நட்டுவைப்பது அசுபமாக கருதப்படுவதால், தொட்டியில் வைப்பது சிறந்தது. துளசி செடிக்கு அருகே கற்றாளை போன்ற முள் செடியினை வைக்கக்கூடாது.
சமையலறைக்கு வெளியே துளசி செடி வைத்தால் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். துளசி செடிக்கு போதுமான சூரிய ஒளி கிடைக்க வேண்டும்.
துளசி செடியை சேதப்படுத்தவோ அல்லது அதன் இலைகள் பட்டுப்போகவோ விடக்கூடாது. முறையாக துளசி செடியினை பராமரிக்கவில்லை என்றால் வீட்டில் உள்ளவர்களுக்கு துரதிர்ஷ்டம் ஏற்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |