இரவில் உறங்கும் போது தலைக்கு பக்கத்தில் இந்த பொருட்களை வைக்க கூடாது ஏன்னு தெரியுமா?
நாம் உறங்கும் போது நமது படுக்கைக்கு அருகிலோ அல்லது தலைக்குப் பக்கத்திலோ குறிப்பிட்ட சில பொருட்களை வைக்க கூடாததற்கான காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
வைக்க கூடாத பொருட்கள்
நீங்கள் உறங்கும் போது தலையணை அல்லது தலைக்கடியில் தங்கம் வைத்து உறங்கினால் அது வாழ்க்கையில் பல தடைகள் ஏற்படும் நெருங்கிய உறவுக்குள் பிரிவை ஏற்படுத்தும்.
எனவே உறங்கும் போது தலைக்கடியில் தங்கம் வைப்பதை தவிர்க்க வேண்டும். எப்போதும் உறங்கும் போது முகம் பார்க்கும் கண்ணாடி உங்கள் படுக்கையை நோக்கி இருக்க கூடாது.
இவ்வாறு இருப்பதால் மிகவும் பயப்படும் அளவில் மோசமான பேய் கனவுகள் வரும். அனேகமானோர் மொபைல் போன்களை தலைக்கு அடியில் வைத்து உறங்குவார்கள்.
ஆனால் இது தவறாகும். இதனால் போனில் இருந்து வரும் கதிர்கள் உடல்நலனை பாதிக்கும். தலைக்கு அருகாமையில் தண்ணீர் வைத்து தூங்குவது வழக்கம்.
வாஸ்துப்படி தலைக்கு அருகில் தண்ணீர் வைத்து தூங்கினால் அது, ஜாதகத்தில் கோளாறை ஏற்படுத்தி மனநல பாதிப்பை ஏற்படுத்துமாம். இதனால் தூக்கும்போது தலைக்கு அருகாமையில் தண்ணீர் வைத்து தூங்குவதை தவிர்த்துவிடுங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |