Vastu Tips: வீட்டில் கடிகாரம் எந்த திசையில் இருக்க வேண்டும்?
வாஸ்து சாஸ்திரத்தின்படி வீட்டில் கடிகாரத்தினை எந்த திசையில் தொங்கவிட வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக வீடுகளில் வாஸ்து சாஸ்திரத்தின் படி பொருட்களை வைப்பதை பலரும் வழக்கமாக கொண்டுள்ளனர். ஏன் வாஸ்து சாஸ்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்று பலரும் யோசித்திருக்க மாட்டார்கள்.
வாஸ்து சாஸ்திரப்படி பொருட்களை வைப்பதால் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிப்பதாக நம்பப்படுகின்றது. அதுமட்டுமின்றி வீட்டில் அமைதி, செல்வம் நிறைந்திருக்கும் என்று கூறப்படுகின்றது.
இது நாம் சுவற்றில் தொங்கவிடும் கடிகாரத்திற்கும் உண்டு. அந்த வகையில் வீட்டில் கடிகாரத்தினை எந்த திசையில் தொங்கவிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

கடிகாரத்தை எந்த திசையில் வைக்கலாம்?
கடிகாரத்தினை வடக்கு திசையில் தொங்கவிட்டால் மங்களகரமானதாக பார்க்கப்படுகின்றது. அதாவது செல்வத்தின் கடவுளான குபேரனால் ஆளப்படும் வடக்கு திசையில், வைத்தால் நிதி வளர்ச்சி மேம்படும் என்று நம்பப்படுகின்றது.
அதே போன்று கிழக்கு திசையிலும் கடிகாரத்தினை தொங்க விடலாம். ஏனெனில் கிழக்கு திசை சூரியனுடனும், புதிய தொடக்கத்திற்கும் தொடர்புடையதாக இருக்கின்றது. ஆதலால் கிழக்கு திசையில் கடிகாரம் இருந்தால் நேர்மறை ஆற்றலுக்கு சிறந்ததாக கருதப்படுகின்றது.
வடகிழக்கு திசையிலும் கடிகாரத்தினை வைப்பது ஆன்மீக ஆற்றலை அதிகரிக்குமாம். இதனால் தெளிவு, கவனம் அதிகரிக்கும். அடர்நிறம் இல்லாத கடிகாரத்தினை பயன்படுத்தவும்.

எந்த திசையில் கடிகாரத்தை வைக்கக்கூடாது?
தெற்கு மற்றும் தென்மேற்கு திசைகளில் கடிகாரத்தினை வைப்பது கூடாது. ஏனெனில் மன அழுத்தம் மற்றும் நிதி இழப்பு இவற்றிற்கு வழிவகுக்குமாம்.
மேலும் இவை முன்னேற்றத்தினை தடுப்பதுடன், எதிர்மறை ஆற்றலை கொண்டு வரவும் செய்கின்றது. ஆகவே இந்த திசையில் கடிகாரம் இருந்தால் வேறு இடத்திற்கு மாற்றுவது சிறந்தது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |