தூங்கும் முன் மறக்காம இந்த 3 விஷயங்களை செய்ங்க... வீட்டில் பணத்துக்கு பஞ்சமே இருக்காது!
பொதுவாவே வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் நாம் அலங்கார பொருட்களாக வீடு கட்டப்பட்டிருக்கும் அமைப்பு மற்றும், வீட்டில் வைத்திருக்கும் பொருட்களுக்கும் நமது வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
பொதுவாகவே தொன்று தொட்டு வழக்கத்தில் இருக்கு ஒரு இந்து மத அறிவியல் தான் வாஸ்து சாஸ்திரம். இது இயற்கையின் ஐம்பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகியவற்றைச் சரியான சமநிலையில் வைத்து, நேர்மறை ஆற்றலை வீட்டினுள் ஈர்க்கும் ஒரு கலை என்று சொன்னால் மிகையாகாது.

இந்த வகையில் வீட்டில் செல்வ செழிப்பை அதிகரிக்கவும் நேர்மறை ஆற்றல்களை ஈர்க்கவும் படுக்கைக்கு செல்லும் முன்னர் சமையல் அறையில் கவனிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
அடுப்பை சுத்தம் செய்தல்

நாள் முழுவதும் சமையலுக்கு உதவிய அடுப்புக்கு மரியாதை செலுத்தும் விதமாக தூங்கும் முன்னர் சடையல் அறையையும் குறிப்பாக அடுப்பையும் சுத்தம் செய்தல் வேண்டும்.
சமைக்கும் போது அடுப்பின் மேல் உணவுகளோ, அழுக்கோ படியக்கூடும். அப்படி படிந்த அழுக்கை அவ்வப்போது துடைத்து சுத்தம் செய்து விடுவது மிகவும் சிறப்பு அப்படி செய்யமுடியாத பட்சத்தில் குறைந்த பட்சம் தூங்க செல்லும் முன்னராவது சுத்தம் செய்தல் வேண்டும். இதனை கடைப்பிடிப்பதால் வீட்டில் உணவுப்பொருளுக்கும் பணத்துக்கும் பஞ்சமே ஏற்படாது.
பாத்திரங்களை கழுவுதல்

அவசியம் படுக்கைக்கு செல்லும் முன்னர் சமையலறை தொட்டியில் உள்ள அழுக்கு பாத்திரங்களை கழுவி சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.
சோம்பேறித்தனப்பட்டு பாத்திரங்களை கழுவாமல் தூக்குவதால் வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் பெருகி கடன் தொல்லைகளும், பணத்தட்டுப்பாடும் ஏற்படும். எனவே செல்வ செழிப்பு பெருக வேண்டும் என்றால் அவசியம் பாத்திரங்களை சுத்தல் செய்துவிட்டு படுக்கைக்கு செல்ல வேண்டும்.
சிறிய விளக்கையாகவது ஏற்றுவது

பொதுவவே தூங்க செல்லும் முன்னர் அனைத்த அறைகளிலும் உள்ள லைட்டுகளை அணைப்பது வழக்கம். ஆனால் சமையல் அறையை முற்றிலும் இருட்டாக வைப்பது எதிர்மறை ஆற்றல்களை ஈர்க்கும் என்று சொல்லப்படுகின்றது.
வாஸ்துப்படி, வீட்டின் சமையலை எப்போதும் இருட்டாக இருக்கக்கூடாது. எனவே எப்போதும் இரவு தூங்க செல்லும் முன் சமையலறையில் ஒரு சிறிய லைட்டையாவது ஒளிரவிட வேண்டும். இந்த 3 விடயங்களை கடைப்பிடிக்கும் வீட்டில் செல்வ செழிப்பு எப்போதும் நிறைந்திருக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |