அட்சய திருதியை நாளில் உருவாகும் அட்சய யோகம்: தங்கத்தை குவிக்கப்போகும் டாப் 3 ராசிகள்!
செல்வச் செழிப்பை அள்ளித் தரும் தினமான அட்சய திருதியை இந்த ஆண்டு ஏப்ரல் 19 ஆம் திகதி வருகின்றது.
இந்த நாள் இந்துமதத்தின் பிரகாரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகவும் மங்களகரமான நாளகவும் பார்க்கப்படுகின்றது.

அட்சயம் என்றால் குறையவே குறையாத என்று பொருள். இந்த நாளில் வாங்கும் பொருட்கள் இரண்டிப்பாகும் என்பது நம்பிக்கை.
இந்த சுப யோக தினத்தில் சூரியன் மற்றும் சந்திரன் அதன் ராசியில் உச்சம் பெற்றிருப்பதால், அரிய அட்சய யோகம் உருவாகின்றது.
இந்த மங்களகரமான யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க அளவில் பிரதிபலித்தாலும் பொன் பொருளையை குவித்து இந்த யோகத்தின் உச்ச பலனை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

அட்சய திருதியை நாளில் உருவாகும் அட்சய யோகத்தால் மேஷ ராசிக்காரர்களின் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
இவர்களின் தொழில் வாழ்க்கையில், சூரியனின் ஆசியால் அதிகாரம் மிக்க பதவியில் அமர்வதற்கான வாய்ப்பு உருவாகும்.
முன்னைய முதலீடுகளில் இருந்து எதிர்ப்பாராத வகையில், கிடைக்கும் லாபத்தால் ஆடம்பர பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்பு கிட்டும்.
ரிஷபம்

அட்சய திருதியை நாளில் உருவாகும் அட்சய யோகத்தால் ரிஷப ராசிக்காரர்கள் ராஜ வாழ்க்கை வாழப்போகின்றார்கள்.
எதிர்ப்பாராத வகையில் பெரிய தொகை பணம் கைக்கு வரும். இதனால் தங்கம் வாங்குவதற்கான யோகம் கூடிவரும்.
புதிய வழிகளில் வருமானம் வருவதற்கான வாய்ப்புகள் தானாக உருவாகும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும். நீண்ட நாள் கனவு நனவாகும்.
சிம்மம்

அட்சய திருதியை நாளில் உருவாகும் அட்சய யோகத்தால் சிம்ம ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகின்றது.
வியாபாரம் செய்பவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்க வாய்புள்ளது. பணியிடத்தில் சக ஊழியர்களிடம் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கி சந்திரன் ஆசியால் அமைதியாக சூழல் உருவாகும்.
நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவதற்கான சூழ்நிலை உருவாகும். தங்கம் வெள்ளி வாங்குவதற்கான அதிர்ஷ்டம் காணப்படுகின்றது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |