வீட்டு பால்கனியில் தவறிக்கூட இந்த செடிகளை வளர்க்காதிங்க! தரித்திரம் தேடி வரும்
வாஸ்துபடி வீட்டில் எந்த பொருட்களை எந்த இடத்தில் வைத்தால் என்ன பலன் கிடைக்கும் என்பது ஒரு நம்பிக்கையாகும்.
இது பொதுவான ஒரு நம்பிக்கையாகும் நான்கு திசைகளில் எந்த இடத்தில் எந்த பொருட்களை வைத்தால் என்ன என்ன நன்மை கிடைக்கும் என்பதை வாஸ்த்து சாஸ்திரம் கூறுகிறது.
இவ்வாறு இந்த வாஸ்து விதிகளை நாம் பின்பற்றும் போது வீட்டில் செல்வமும் செழிப்பும் தேடி வரும் என நம்பப்படுகிறது. அந்த வகையில் வீட்டு பால்கனியில் எந்தெந்த செடிகளை வைக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
வாஸ்த்து விதிகள்
எல்லோரது வீட்டிலும் செடிகள் மரங்கள் என்பது கட்டாயம் இருக்கும். பொதுவாக மாடி வீடுகளில் வண்ண வண்ண செடிகளை வைத்திருப்பதை கண்டிருப்பீர்கள்.
இதை சிறிய தொட்டிகளில் வைத்து தொங்க வைத்திருப்பார்கள். இது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். ஆனால் பலரும் அறியாத வகையில் வாஸ்த்து விதிப்படி சில செடிகளை பால்கனி வீட்டில் வைக்க கூடாது.
பால்கனியின் கிழக்கு திசையில் துளசி மற்றும் சாமந்தி போன்ற செடிகளை வளர்க்க வேண்டும். இவ்வாறு இந்த செடி வளர்ப்பதால் உங்கள் குழந்தையின் வாழ்க்கைக்கு சாதகமான சூழல் உருவாகும்.
வடக்கு திசையில் பெரிய தாவரங்களை வைக்க கூடாது. சிறிய செடிகளை வைத்து மணி பிளாண்ட் அமைத்தால் வீட்டில் லக்ஷ்மி தேவியின் அருள் கிடைக்கும்.
மேற்கு திசையில் நடுத்தர பச்சை தாவரங்களை வளர்த்தால் சனியின் நிலை பலப்படும். இதனால் முன்னேற புதிய பாதைகள் கிடைக்கும்.
தெற்கு திசையில் பெரிய தாவரத்தை வளர்த்தால் மரியாதை இரட்டிப்பாக காணப்படும்.
வளர்க்க கூடாத செடிகள்
இந்த செடிகளை மறந்து கூட பால்கனியில் வளர்க்க கூடாது. பால்கனி எந்த திசையில் இருந்தாலும், கற்றாழை அல்லது ரப்பர் செடிகளை நட கூடாது.
வீட்டில் இறந்த செடியை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லையெனில் பிரச்சனைகள் ஏற்படும். பால்கனியில் அதிக கொடிகளை வளர்த்தால் அது எதிர்மறை ஆற்றலை உருவாக்கும்.
மரத்தாலான பொருட்களை வைக்க வேண்டும் என்றால் அதை தென்மேற்கு திசையில் வைக்க வேண்டும். வேறு திசையில் வைக்க கூடாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |