அதிர்ஷ்டத்தை வீட்டிற்குள் கொண்டு வரும் வாஸ்து விஷயங்கள்.. உடனே செய்ங்க!
பொதுவாக வீடுகளில் வாஸ்து குறிப்புக்களை பின்பற்றுவது வழக்கம்.
வீட்டில் வாஸ்து குறிப்புக்களை பின்பற்றினால் தோஷம் குறைபாடு நீங்கும் என பலரும் நம்புகிறார்கள்.
அத்துடன் வீட்டிற்குள் நேர்மறையான ஆற்றல்களை நிரம்பச் செய்யும். இதனால் வீட்டிற்கு எப்போதும் கஷ்டம் இருக்காது.
அந்த வகையில் வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் வாஸ்து குறிப்புகள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் வாஸ்து குறிப்புகள்
1. வீட்டின் நுழைவாயில் என்பது நேர்மறையான ஆற்றல்களை வீட்டிற்குள் கொண்டு வரும் வழியாக பார்க்கப்படுகின்றது. அந்த இடம் எப்போதும் அழகாகவும் சுத்தமாகவும் இருக்க வேண்டும். முற்றம் எப்போதும் வெளிச்சமாக இருப்பது அவசியம்.
அதே வேளை, வீட்டின் பிரதான கதவு வடக்கு கிழக்கு திசையில் அமைந்திருக்க வேண்டும். வாசல் கதவை எப்போதும் கழற்றக் கூடாது. இது எதிர்மறையான ஆற்றலை வீட்டினுள் கொண்டு வரும்.
2. உங்கள் வீட்டிற்குள் சூரிய ஒளி எந்த வித தடைகளும் இல்லாமல் வர வேண்டும். ஏனெனின் சூரிய ஒளி வீட்டிற்குள் இருக்கும் பொழுது எதிர்மறையான ஆற்றல்கள் இல்லாமல் போகும். அத்துடன் சுகாதாரத்தை கொண்டு வரும்.
3. நம்மில் சிலருக்கு ஒரு வகையான மன அழுத்தம் இருக்கும். இது குடும்ப வாழ்க்கையையும் வீட்டை பாதிக்கும். இது போன்ற நேரங்களில் வீட்டில் மீன் தொட்டி வைக்கலாம். அதிலுள்ள வண்ண மீன்கள் வாஸ்து ரீதியாக நல்ல பலன்கள் கொடுக்கும். அத்துடன் நமக்கு வரும் மன அழுத்தமும் குறையும். மீன் தொட்டியை வடகிழக்கு அல்லது தென்கிழக்கு திசையில் வைக்கவும்.
4. வீட்டில் முள் செடிகள் வளர்க்கக்கூடாது இது வீட்டிற்குள் எதிர்மறையான ஆற்றல்களை கொண்டு வரும். அத்துடன் வீட்டு அலங்கரிப்பதற்கு பிளாஸ்டிக் பூக்களை பயன்படுத்தக்கூடாது. இது கெட்ட அதிர்வலைகளை வீட்டிற்குள் கொண்டு வரும். அத்துடன் பட்டுப்போன மரங்கள் வளர்க்கக் கூடாது. இப்படியான தவறுகளை குறைத்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும்.
5. உங்கள் வீட்டில் எதிர்மறையான ஆற்றல்கள் இருப்பது போல் உணர்ந்தால் கூழாங்கற்களை கொண்டு பிரமிடு போல் செய்து வைக்கவும். இது எதிர்மறையான ஆற்றல்களை மிரள வைக்கும். அத்துடன் கல்லை பூஜையறையில் அல்லது மையப்பகுதியில் கூட வைக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |