தரித்திரத்தை விலைக் கொடுத்து வாங்கும் கடன்கள்.. பெண்கள் அவசியம் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக வீட்டில் 6 மணிக்கு விளக்கேற்றிய பின்னர் யாருக்கும் எந்த பொருளையும் கொடுக்காதீர்கள் என முன்னோர்கள் அடிக்கடி கூறுவார்கள்.
இதனை தவறும் பட்சத்தில் வீட்டில் தரித்திரம் வந்து சேரும் என்பதே உண்மை.
அந்த வகையில் வீட்டிற்கு எப்படியெல்லாம் தரித்திரம் வந்து சேருகின்றது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
கொடுக்கக் கூடாத பொருட்கள்
1. பக்கத்து வீடுகளில் இருப்பவர்களுக்கு மறந்தும் அரிசி கொடுக்கக் கூடாது. ஏனெனின் அரிசியில் சுக்கிரனின் ஆதிக்கம் அதிகம் இருக்கின்றது. இதனால் நீங்கள் யாருக்கும் வீட்டிலுள்ள அரிசியை கடனாக கொடுக்கக் கூடாது. மீறிக் கொடுத்தால் சுக்கிரதோஷம் ஏற்படும். மற்றும் வீட்டில் அடிக்கடி சண்டை ஏற்படும்.
2. சனி பகவானுடன் தொடர்புடைய பொருட்களில் எள், கடுகு எண்ணெய் முக்கியமானது. இவைகளை யாருக்கும் கடனாக கொடுக்கக் கூடாது. அதே போல் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களையும் கடனாக கொடுக்கக் கூடாது. சனிக்குரிய சனிக்கிழமைகளில் இவ்வாறான தவறுகளை செய்வதால் பக்க விளைவுகள் பயங்கரமாக இருக்கும்.
3. பக்கத்து வீட்டுக்காரர்கள் உங்கள் வீட்டிலுள்ள முக்கிய பொருட்களில் ஒன்றான மஞ்சளை கேட்டால் மறந்தும் கொடுக்காதீர்கள். ஏனெனின் இது வியாழன் கிரகத்துடன் தொடர்புடையது. இதனால் குரு தோஷம் ஏற்படும். அது மட்டுமன்றி, சமையலுக்கு பயன்படுத்தும் பூண்டு, வெங்காயம் இவற்றையும் கொடுக்கக் கூடாது. இது வீட்டின் செழிப்பை இல்லாமலாக்கும்.
4. வீட்டின் மகாலட்சுமி உப்பில் இருக்கின்றது என்பார்கள். இதனை ஒரு போதும் யாருக்கும் கொடுக்கக் கூடாது. மீறிக் கொடுத்தால் வீட்டில் நிதி நெருக்கடி ஏற்படும்.
5. வீட்டிலுள்ள செருப்பு, துணிமணிகள், பூஜை பொருட்கள் இவற்றை கொடுப்பது தவறு. கொடுக்க விரும்பினால் கோவிலுக்கு கொடுங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |