Vastu Tips: வீட்டில் இந்த திசையில் மட்டும் செருப்புகளை கழட்டாதீங்க.. வறுமை அதிகரிக்கும் ஜாக்கிரதை
காலில் அணியும் காலணிகளை கழற்றி வைப்பது எந்த திசையில் வைக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
காலணி வாஸ்து டிப்ஸ்
இந்து மதத்தினைப் பொறுத்தவரையில் வாஸ்து சாஸ்திரம் என்பது அதிகமாக பார்க்கப்படுகின்றது. எந்தவொரு காரியத்தை செய்யும் முன்பு வாஸ்து பார்த்தே தொடங்குகின்றனர்.
இதில் ஒன்றுதான் வீட்டில் செருப்பு, ஷீ வைப்பது. ஆம் வீட்டில் செருப்பு, ஷு இவற்றினை தலைகீழாக வைத்தால் அசுபமாக கருதப்படுகின்றது.
இவ்வாறு செருப்பு தலைகீழாக இருந்தால், குடும்பத்தில் சண்டை சச்சரவு ஏற்படுவதுடன், எதிர்மறை ஆற்றல் அதிகரிப்பதுடன், குடும்பத்தில் மகிழ்ச்சி, அமைதி இவை சீர்குலையும்.
செருப்பை வடகிழக்கு திசையில் வைக்கக்கூடாது. இந்த திசையில் உங்களது செருப்பை கழற்றினால் லட்சுமி தேவியின் கோபம் ஏற்படுவதுடன், குடும்பத்தின் நிதி நிலைமை பலவீனமாகி வறுமை அதிகரிக்கும். குடும்பத்தினர் உடல்நிலையும் மோசமடையும்.
வாஸ்து படி வீட்டில் செருப்புகளை தெற்கு அல்லது மேற்கு திசையில் வைக்கவும். ஆனால், பிரதான கதவிற்கு அருகில் செருப்புகளை கழற்றக்கூடாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |