வீட்டில் இந்த எறும்புகளின் தொல்லை அதிகமா? அது அசுப பலனை கொடுக்கும் ஜாக்கிரதை
வீட்டில் எறும்புகள் இருப்பது நல்ல சகுணமா? கெட்ட சகுணமா? என்பதைக் குறித்த தகவலை இந்த பதிவில் நாம் காணலாம்.
எறும்புகள் நமக்கு கடின உழைப்பு, ஒழுக்கம், விடாமுயற்சி என்ற பாடத்தினை கற்றுத் தருகின்றது. குழந்தை பருவத்திலிருந்தே இந்த எறும்புகள் மனிதர்களின் உணர்ச்சியில் அற்புத விலங்காக நாம் அவதானித்து வருகின்றோம்.
ஆனால் எறும்புகளுக்கு பின்னாலும் வாஸ்து சாஸ்திரம் உள்ளது என்பது நம்மில் பலருக்கு தெரிவதில்லை. பல்வேறு நிறங்களில் வரும் எறும்புகளின் வருகை அதற்கான அர்த்தத்தினை இங்கு தெரிந்து கொள்வோம்.
எறும்புகள் கூறும் வாஸ்து என்ன?
எறும்புகள் வரிசையாக இருப்பத வீட்டில் மகிழ்ச்சி மற்றும் செல்வத்தினை அடையாளமாக கருதப்படுகின்றது. அதிலும் கருப்பு எறும்புகள் வருவது வீட்டில் மங்களகரமானதாக கருதப்படுகின்றது.
சிவப்பு நிற எறும்புகள் வீட்டில் அசுபமாக பார்க்கப்படுகின்றது. ஏனெனில் இவை வாழ்க்கையில் பிரச்சினைகள், சச்சரவுகள், அதிக செலவுகள் ஏற்படுமாம். ஆனால் சிவப்பு எறும்புகள் வாயில் முட்டைகளை எடுத்துச் செல்வதைக் கண்டால் அது நல்ல அறிகுறியாக இருக்கின்றதாம்.
வீட்டின் சுவரில் எறும்புகள் வரிசையாக ஏறுவதைக் கண்டால் சுப காரியங்கள் நடக்கப்போகின்றது என்று அர்த்தமாம். அதுவே இறங்கினால், அது சேதத்தின் அறிகுறியாக பார்க்கப்படுகின்றது.
இதுவே அரிசி பெட்டியில் எறும்புகளை நீங்கள் கண்டால், அவை நிதி நெருக்கடியை போக்குவதுடன், வீட்டில் உணவுக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் என்று அர்த்தமாம்.
கறுப்பு எறுப்புகள் வீட்டில் வடக்கு அல்லது தெற்கு திசையில் நுழைந்தால் அது நல்ல சகுணம் என்றும், அதுவே கிழக்கிலிருந்து வந்தால் அவை கெட்ட செய்தி வர உள்ளது என்று அர்த்தம். மேற்கில் இருந்து வந்தால் பயண யோகத்தைக் குறிக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |