வீட்டில் கட்டாயம் வளர்க்க வேண்டிய வாஸ்து செடிகள்: காரணம் என்ன தெரியுமா?

Vinoja
Report this article
பொதுவாகவே பசுமையான செடிகள் உங்கள் சுற்றுப்புறத்திற்கு நேர்மறை ஆற்றலை வழங்குவதுடன் அழகும் சேர்க்கிறது. இருப்பினும், வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டிற்குள் வைத்து வளர்கக் கூடிய தாவரங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்ககலாம்.
வாஸ்து படி, தாவரங்கள் சுற்றுச்சூழலில் இருந்து எதிர்மறை ஆற்றல்களை அகற்றவும் நேர்மறை ஆற்றலை ஈர்க்கவும் உதவுகின்றது. வாஸ்து தாவரங்கள் ஆற்றல் ஓட்டம் மற்றும் சமநிலையை பராமரிக்க உதவுகின்றன. சில வாஸ்து தாவரங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.
வாஸ்து செடிகளின் நன்மைகள்
வாஸ்து தாவரங்கள் குடியிருப்பாளர்களின் நிதி நிலைமையையும் பாதிக்கலாம். இருப்பினும், வாஸ்து தாவரங்களின் சரியான இடம் அவசியம்.தாவரங்கள் வாஸ்துவுடன் இணங்கவில்லை என்றால், அது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் மற்றும் துரதிர்ஷ்டத்தை ஈர்க்கும்.இது குடும்பத்தில் உள்ள அனைவரையும் பாதிக்கக்கூடும்
அந்த வகையில் மூங்கில் செடி வாஸ்து படி, மூங்கில் (Dracaena braunii) உங்கள் வீட்டிற்கு மகிழ்ச்சி, நல்ல அதிர்ஷ்டம், புகழ், அமைதி மற்றும் செல்வத்தை கொண்டு வருகிறது. இது உங்கள் வீடு அல்லது அலுவலக மேசைக்கு ஒரு சிறந்த அழகினை வழங்குவதுடன் உளவியல் ரீதியாகவும் நல்ல எண்ணங்களை தோற்றுவிக்கக் கூடியது.
இந்தியாவில் பிரபலமான உட்புற தாவரங்களில் ஒன்று மணி பிளான்ட். இதன் இதய வடிவிலான இலைகள் அலங்காரத்திற்கு செழுமை சேர்க்கின்ற அதே வேலை இதை வீட்டில் வளர்ப்பதால் செல்வம் பெருகும் என்ற ஒரு நம்பிக்கையும் மக்கள் மத்தியில் நிலவுகின்றது. மேலும் இதற்கு பணத்தை ஈர்க்கும் சக்தி அதிகமாக இருப்பதால் இரு பிரபல்யம் வாய்ந்த உற்புற தாவரமாக காணப்படுகின்றது.
ஜேட் செடி அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் தருவதோடு, வளர்ச்சியையும் இது குறிக்கிறது. மேலும், இந்தச் செடி நட்பை வளர்க்கும் என்றும் நம்பப்படுகிறது. வாஸ்துபடி, ஜேட் செடியை தென்கிழக்கு திசையில் வைக்க வேண்டும். இதனுடைய வட்டமான மென்மையான இலைகள் கண்களைக் கவரும் வண்ணம் இருக்கிறது.
அழகான மஞ்சள் நிறப் பூக்களைக் கொண்டுள்ள டேபோடில்ஸ் செடி (Daffodils) சூழ்நிலையை அழகாக்குகிறது. இது அதிர்ஷ்டத்தையும் தொழில் ரீதியான அந்தஸ்தையும் கொண்டு வரும் என்று நம்புகிறார்கள். இந்த செடியை வடகிழக்கு மூலையில் வைப்பது சிறந்த பலனை கொடுக்கும்.
கெட்டியான கூர்மையான இலைகளைக் கொண்ட பாம்பு செடி (Snake plant) மிகவும் வசீகரிக்கும் தோற்றத்தில் இலைகளை கொண்டிருக்கும் வாஸ்துபடி, பாம்பு செடி நேர்மறை ஆற்றலை ஈர்ப்பதில் பிரசித்தி பெற்றது. இதை ஜன்னலுக்கு அருகில் வைக்கும்போது, அது ஆக்ஸிஜன் ஓட்டத்தை மேம்படுத்துவதோடு, அறைக்குள் அமைதியான சூழ்நிலையை உருவாக்குகிறது.
மேலும் ரப்பர் செடியை வீட்டிற்குள் வைத்திருப்பது மங்கலகரமானதாக கருதப்படுகிறது. வளமான நிதி, செல்வச்செழிப்பு மற்றும் வணிக ரீதியான வெற்றியை இது கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது.
ரப்பர் செடியை அறையின் தென்கிழக்கு திசையில் வைத்தால் சிறப்பான பலன்களை பெற முடியும். இந்தவகை செடிகளை வீட்டில் வளர்ப்பதன் மூலம் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் அலப்பரிய பலன்களை பெற முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |