பிரபல இயக்குனர் திடீர் மரணம்! சிக்கிய கடிதத்தால் அதிருப்தியில் திரையுலகம்
பிரபல இயக்குனர் ரவி ஷங்கர் சென்னையில் அவரது இல்லத்தில் தூக்கிட்டு தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் ரவி ஷங்கர்
‘பாக்யா’ வார இதழில் வெளியான ‘குதிரை’ என்ற சிறுகதை மூலம் பத்திரிகையில் நுழைந்தவர் ரவி சங்கர்.
இயக்குநர்கள் பாக்யராஜ், விக்ரமன் ஆகியோரிடம் உதவியாளராக இருந்து வந்த நிலையில், விக்ரமன் இயக்கத்தில் வளெியான சூர்யவம்சம் படத்தில் இடம்பெற்ற ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ என்ற பாடலை எழுதினார்.
பின்பு கடந்த 2002ம் ஆண்டு சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், குணா நடிப்பில் வெளியான வருஷமெல்லாம் வசந்தம் என்ற திரைப்படத்தினை இயக்கினார்.
இந்தப் படத்தில் இடம்பெற்ற ஹிட் பாடலான ‘எங்கே அந்த வெண்ணிலா’ உள்ளிட்ட அனைத்துப் பாடல்களையும் ரவி ஷங்கர் தான் எழுதியிருந்தார்.
திருமணம் செய்து கொள்ளாமல் கே.கே நபரில் தனியாக வசித்து வந்த ரவி ஷங்கருக்கு தற்போது 63 வயதாகியுள்ள நிலையில், நேற்று தன் அறையில் தூக்கிட்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இவர் எழுதியுள்ள 5 பக்கம் கொண்ட கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இதை முயற்சித்து வருவதாகவும், இதற்காக ஒரு புத்தகம் வாங்கி அதில் குறிப்பிட்டது போன்றும் முயற்சி செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
கடைசியில் எதுவும் கைகூடாததால், வலி நிவாரணியும், கயிறு தான் கதி என்று கூறி இந்த முடிவை எடுத்துள்ளார்.
நண்பரிடம் வாங்கிய 10 ஆயிரம் ரூபாய் கடனை கொடுத்துவிடுமாறு தனது சகோதரியிடம் கூறியுள்ளேன்.. வீட்டு உரிமையாளரிடம் தனது பணம் ஒரு லட்சம் இருப்பதாகவும் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
இது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |