குட் நியூஸ் சொன்ன வருண் தேஜ்- நட்சத்திர தம்பதியை வாழ்த்தி தள்ளும் இணையவாசிகள்
நடிகர் வருண் கொனிடலா மற்றும் லாவண்யா தம்பதி கர்ப்பமாக இருப்பதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
வருண் கொனிடலா- லாவண்யா
சினிமா பிரபலங்கள் பற்றிய செய்திகள் நாளுக்கு நாள் சமூக வலைத்தளங்களில் அதிகமாகி வருகிறது.
இதன்படி, தமிழில் பிரம்மன், மாயவன் உட்பட சில படங்களில் நடித்தவர் தான லாவண்யா திரிபாதி.
இவர், தெலுங்கு சினிமாவில் பிரபலமாக நடித்து வரும் நடிகர் வருண் தேஜை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் இத்தாலியில் மிக பிரமாண்டமாக நடந்து முடிந்தது. இதில் உறவினர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அதிலும் குறிப்பாக வருண் தேஜ், பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகனாவார். சிரஞ்சீவியின் மெகா குடும்பத்து திருமணம் என்பதால் அவர்கள் குடும்பத்தை சேர்ந்த முன்னணி நடிகர்களான பவன் கல்யண், ராம்சரண், அல்லு அர்ஜுன், அல்லு சிரிஷ் உட்படபலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
கர்ப்பம்
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் வருண் தேஜ்- லாவண்யா தம்பதிகள் கர்ப்பமாக இருப்பதை அழகிய புகைப்படத்துடன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
இதனை பார்த்த இணையவாசிகளும், பிரபலங்களும் தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |