நடிகர் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி காப்பியா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
விஜய் சொன்ன குட்டிக்கதை காபி என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
வாரிசு
நடிகர் விஜய் நடிப்பில் பொங்கல் தினத்தன்று வெளியாகவிருக்கும் படம் தான் வாரிசு.
வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தில் ராஜு தயாரித்திருக்கும் இந்தப் படத்திற்கு முதன் முறையாக இசையமைக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் தமன்.
இந்த படத்தில் ராஸ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், சம்யுக்தா, யோகி பாபு, பிரகாஷ்ராஜ், பிரபு, ஜெயசுதா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கின்றது.
இசை வெளியீட்டு விழா
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் சனிக்கிழமையன்று நடைபெற்றது.
இதுவரை இல்லாத அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருந்தது. இதனால் நடிகர் விஜய்யும் செல்பி வீடியோ எடுத்து தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.
குட்டி கதை
விஜயின் ஆடியோ வெளியீட்டு விழா என்றாலே குட்டிக் கதை இருக்கும். அதைப்போல் இந்த இசை வெளியீட்டு விழாவிலும் வழக்கம் போல குட்டி கதை ஒன்று கூறியுள்ளார்.
உங்களுக்கு எப்போதும் ஒரு போட்டியாளர் தேவை. முதலில் உங்களுடன் போட்டியிடுங்கள், உங்களுக்கு நீங்களே சொந்த போட்டியாக இருங்கள்" என்று தனது சினிமா பயணத்தை பற்றி எடுத்து சொன்னார்.
கிளம்பிய சர்ச்சை
இந்நிலையில் விஜய் சொன்ன குட்டிக்கதை காபி என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
படையப்பா வெற்றிக்கு பிறகு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் ," எனக்கு எதிரியும் நான் தான்.. நண்பணும் நான் தான்.. எனக்கு என் படம் மட்டும் தான் எதிரி.. மத்தவங்க படத்துக்கு நான் போட்டி இல்ல எனவே எனக்கு நான்தான் போட்டி" எனக் கூறியிருந்தார்.
தற்போது தற்போது இந்த வீடியோவை தேடிப்பிடித்து பகிர்ந்து வரும் நெட்டிசன்கள் விஜயின் இயக்குனர் அட்லி தான் காப்பியடிப்பார் என்றால் விஜய் கூட கதைகளை காப்பியடிக்க ஆரம்பித்துவிட்டார் என விமர்சித்து வருகின்றனர்.
தற்போது இந்த பிரச்சினை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.