Viral video: content கிரியேட்டராக மாறிய நடிகை வரலட்சுமி... என்ன பண்ணிருக்காங்கன்னு பாருங்க
நடிகை வரலட்சுமி சரத்குமார் மாதவிடாயின் போது மாதந்தோறும் பெண்கள் எதிர் நோக்கும் உளவியல் பிரச்சினைகளை மிகவும் அழகான முறையில் வெளிப்படுத்தி வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை வரலட்சுமி
போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். இவர் பிரபல மூத்த தமிழ் திரைப்பட நடிகர் சரத்குமாரின் மகள் ஆவார்.
வரலக்ஷ்மி சரத்குமார் சில மாதங்களுக்கு முன்பு காதலர் நிக்கோலை சச்தேவ் என்பவரை காதலித்து குடும்பத்தாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார்.
வரலக்ஷ்மியின் கணவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் அவருக்கு டீனேஜில் ஒரு மகளும் இருக்கின்றார். சமீபத்தில் நடிகை வரலட்சுமி தனது கணவர் மற்றும் மகளுடன் ஹனிமூன் சென்ற புகைப்படத்தினை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.
குறித்த விடயம் இணையத்தில் வைரலானது ரசிகர்கள் வரலட்சுமி சிறந்த மனைவி மட்டுமின்றி சிறந்த தாய் என புகழ்ந்து தள்ளினார்கள்.
இந்நிலையில் தற்போது மாதவிடாயின் போது மாதந்தோறும் பெண்கள் எதிர் நோக்கும் உளவியல் பிரச்சினைகளை மிகவும் அழகான முறையில் ஆண்களுக்கு உணர்த்தும் விதமாக தனது சமூக வளைத்தள பக்கத்தில் காணொளியொன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த காணொளியானது தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருவதுடன் ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான கமெண்ட்டுகளையும் பெற்று வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |