அம்மாவான வரலட்சுமி சரத்குமார் - அவரே பேட்டியில் பேசியது வைரல்
கடந்த வரும் காதலித்தவரை கரம்பிடித்த வரலட்சுமி சரத்குமார் தற்போது அம்மாவாக இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கின்றது.
வரலட்சுமி சரத்குமார்
சரத்குமாருக்கு மொத்தம் இரண்டு மனைவிகள். முதல் மனைவியான சாயா தேவியை விவாகரத்து செய்துவிட்டார். அந்தத் தம்பதிக்கு பிறந்தவர் வரலட்சுமி. இவர் போடா போடி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.
முதல் படம் தோல்வியடைந்தாலும் அதில் தனது திறமையை வெளிப்படுத்தியதால் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தன. அந்தவகையில் தாரை தப்பட்டை, சர்கார், சண்டக்கோழி 2 என பல படங்களில் நடித்தார்.

இவற்றில் எந்தப் படமும் ஓடவில்ல. அதேசமயம் ஹீரோயின் ரோலாக இருந்தாலும் சரி; வில்லி ரோலாக இருந்தாலும் சரி தன்னுடைய முழு உழைப்பை அதில் போடுவார் வரலட்சுமி.
இதற்கிடையில் அவர் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரைத்தான் காதலிக்க செய்தார். நிக்கோலாய் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்று ஒரு பெண் குழந்தை அவருக்கு உள்ளது.
இந்த நிலையில் இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த வருடம் தாய்லாந்தில் திருமணம் செய்துவைத்தார் சரத்குமார். இந்நிலையில் வரலட்சுமியின் பேட்டி ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.

அவர் அளித்த பேட்டி ஒன்றில், "தாய்மை என்பது பெரிய விஷயம்தான். ஆனால் ஒரு குழந்தையை பெற்றால்தான் தாய் என்பது இல்லை. எனக்கு குழந்தை பெற்றுக்கொள்வதில் விருப்பமில்லை.
ஒருவேளை அந்த முடிவு எதிர்காலத்தில் மாறலாம். நான் என் தங்கைக்கு, நாய்க்கு தாயாக இருக்கிறேன். என்னை சுற்றியுள்ளவர்களை நன்றாக பார்த்துக்கொள்கிறேன். அதுதான் என்னை பொறுத்தவரை தாய்மை. என்று கூறியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |