கொழுகொழு இருந்த வரலட்சுமி எப்படி உடல் எடையை குறைத்தார் தெரியுமா?
நடிகையும், சரத்துகுமாரின் மகளுமான வரலட்சுமி தான் எவ்வாறு உடல் எடையை குறைத்தார் என்பதை பற்றி தனது சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
வரலட்சுமி தன்னுடைய உடலைக் குறைக்க ஜிம்முக்கு சென்று கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டதோடு தீவிரமாக டய்டையும் பின்பற்றியிருக்கிறார்.
அந்தவகையில் தற்போது இவர் எப்படி உடல் எடையை குறைத்தார்? என்ன மாதிரியான உடற்பயிற்சிகளை மேற்கொண்டார் என்பதை பற்றி பார்ப்போம்.
உடற்பயிற்சி
ஒரு நாளைக்கு கிட்டதட்ட ஒன்றரை முதல் இரண்டு மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறார்.
காலை எழுந்ததும் மாறிப் படிகளில் ஏறி இறங்குவது, ஜம்பிங் போன்ற இன்டோர் உடற்பயிற்சிகளையும் மாலை நேரங்களில் ஜிம்முக்கு சென்று எடை தூக்கும் பயிற்சி, ஏரோபிக் பயிற்சிகள் மற்றும் கார்டியோ ஆகியவற்றை மேற்கொள்கிறார்.
டயட்
காலை - காலையில் தூங்கி எழுந்ததும் வரலட்சுமி இரண்டு கிளாஸ் அளவுக்கு வெந்நீர் தான குடிப்பாராம்.
காலை உணவு - தன்னுடைய ஊட்டச்சத்து நிபுணர் பரிநதுரைப்பதின் அடிப்படையில் காலை உணவை தேர்வு செய்து சாப்பிடுவாராம். அது வாரத்திற்கு வாரம் மாறுபடும். அதில் மிக முக்கியமான பிரேக்பாஸ்ட்களில் ஒன்றாக இருப்பது பாதாம் பாலும் வாட்டர் மெலனும்.
இரவு உணவு - இரவு உணவை 7.30 மணிக்கு முன்பாக எடுத்துக் கொள்வாராம். 7.30 மணிக்கு மேல் எக்காரணம் கொண்டும் உணவு எடுக்க மாட்டாராம்.
பிடித்த உணவு
வரலட்சுமிக்கு தென்னிந்திய உணவும் பிடிக்கும். அதிலும் இட்லியும் அதற்கு தொட்டுக் கொள்ள மீன் குழம்பு இருந்தால் மிகப் பிடிக்கும்.
எல்லா உணவுகளையும் விட அவருக்கு பிரியாணி என்றால் உயிர். அதிலும் மட்டன் பிரியாணி மிகப் பிடிக்குமாம்.