மகாலட்சுமி அருள் பெறும் 3 ராசிகள்: இன்று வரலட்சுமி விரதம் தரும் அதிர்ஷ்ட பலன்கள்!
இந்து மதத்தில் செல்வம் மற்றும் செழிப்பின் அதிபதியாகக் கருதப்படும் லட்சுமி தேவி, முக்கியமான தெய்வங்களில் ஒருவராக போற்றப்படுகிறார்.
செல்வ வளம், குடும்ப நலன் மற்றும் வாழ்க்கையில் செழிப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக மகாலட்சுமியை வழிபடும் வரலட்சுமி விரதம் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகக் கருதப்படுகிறது.

இந்த புனிதமான நாளில் லட்சுமி தேவியை முழு மனதுடன் வழிபடுவதன் மூலம், அவரதுஅருளும் ஆசீர்வாதமும் வீட்டில் நிறைந்து, செல்வமும் செழிப்பும் பெருகும் என்பது பல நூற்றாண்டுகளாக நிலவி வரும் நம்பிக்கையாகும்.
இந்நிலையில், இன்று ஆகஸ்ட் 21ஆம் தேதி வரவிருக்கும் வரலட்சுமி விரதம் ஆன்மிக ரீதியில் மட்டுமின்றி, ஜோதிட ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகக் கருதப்படுகிறது.
இந்த ஆண்டு வரலட்சுமி விரதத்தின் போது சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அதிகரிப்பது, தொழில் மற்றும் பணியில் முன்னேற்றம் ஏற்படுவது, மேலும் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் கிடைப்பது போன்ற சாதகமான பலன்கள் கிடைக்கக்கூடும் என ஜோதிடத்தில் கூறப்படுகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டு வரலட்சுமி விரதம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை அள்ளிக்கொடுக்கப்போகின்றது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு, இந்த ஆண்டு வரலட்சுமி விரதக் காலம் சாதகமான மாற்றங்களைத் தரக்கூடும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் கைக்கு வரும் யோகம் காணப்படுகின்றது.
வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள், ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம்.
குடும்பத்தின் நிதிநிலை மேம்படும். தேவையற்ற செலவுகளைக் குறைத்து சேமிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. புகழும், அலுவலகத்தில் மதிப்பும் உயரும். மேலும் உடல்நலமும் சாதகமாக இருக்கும்.
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு, வரலட்சுமி விரதக் காலம் புதிய வாய்ப்புகளைத் தரக்கூடும். தடைப்பட்டிருந்த வேலைகள் குறைந்த முயற்ச்சியிலேயே நிறைவேறும்.
வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கலாம்; வியாபாரத்தில் வருமானத்தை அதிகரிக்கும் புதிய வழிகள் தானாகவே உருவாகும்.
எதிர்பாராத பணவரவு அல்லது நிலுவைத் தொகைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறலாம்.தன்னம்பிக்கை, ஆளுமை மற்றும் உடல்நலம் சிறப்பாக இருக்கும்.
தனுசு

தனுசு ராசியினருக்கு, இக்காலம் நிதி ரீதியாக நம்பிக்கையளிப்பதாக இருக்கும். நீண்ட நாட்களாகத் தீர்க்க போராடிய பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
வியாபாரிகள் புதிய முதலீடுகள் அல்லது தொழில் விரிவாக்கம் குறித்து சிந்திக்கலாம். வேலை செய்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டும், புதிய பொறுப்புகளும் கிடைக்கும்.
பணத்தைத் திட்டமிட்டு செலவழித்து, சேமிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. பணப் பிரச்சினைகள் குறைந்து, குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கும் வாய்ப்பும் உள்ளது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |