மகள் மீது அவ்வளவு பாசமா? கேமராவில் சிக்கிய புகைப்படம்- நிகழ்ச்சியில் நடந்த சம்பவம்
வரலட்சுமி சரத்குமார் நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் பொழுது அவரின் தொலைபேசியின் புகைப்படம் கேமராவில் சிக்கியுள்ளது.
நடிகை வரலட்சுமி
தமிழ் சினிமாவில் நாட்டாமை சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் நுழைந்தவர் தான் நடிகை நடிகை வரலட்சுமி சரத்குமார்.
இவர், சினிமாவில் நடிக்க முதலில் பெற்றோர்கள் அனுமதி கொடுக்கவில்லையாம். இதனால் முன்னணி இயக்குநர்களின் பட வாய்ப்புகள் தவிர விடப்பட்டுள்ளதாக பேட்டிகளில் கூறியுள்ளார்.
அதன் பின்னர் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான போடா போடி திரைப்படத்தில் நாயகியாக நடித்திருப்பார். இப்படியாக தொடர்ந்து தாரை தப்பட்டை, சர்கார், விக்ரம் வேதா, சத்யா, சண்டக்கோழி 2 என உள்ளிட்ட படங்களிலும் தெலுங்கு, கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இதற்கிடையில், கடந்த ஆண்டு மும்பை தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.
கேமராவில் சிக்கிய புகைப்படம்
இந்த நிலையில், டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வரும் வரலட்சுமியின் புகைப்படங்கள் மற்றும் அவரின் அனுபவங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ஷோவில் மகள்- வரலட்சுமி இருக்கும் பொழுது நடிகர் சரத்குமார் வீடியோ கோலில் இருந்த காட்சி புகைப்படமாக தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
இதனை பார்த்த இணையவாசிகள்,“மகள் மீது இவ்வளவு பாசமா?” எனக் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
