கொள்ளை அழகில் ரசிகர்களை ஈர்க்கும் வரலக்ஷ்மி சரத்குமார்... வைரலாகும் புதிய புகைப்படங்கள்
வரலக்ஷ்மி சரத்குமார் நீலநிற ட்ரெண்டிங் சேலையில் அழகிய மயில் போல் காட்சியளிக்கும் புதிய புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
வரலக்ஷ்மி சரத்குமார்
நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி சரத்குமார், கடந்த 2012-ம் ஆண்டு வெளியான 'போடா போடி' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
முதல் படமே சூப்பர் ஹிட் கொடுத்தது. அதனை தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.
ஹீரோயினாக மட்டுமல்லாமல் வில்லி, குணச்சித்திரம் என தனக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்கள் கொண்ட கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
வரலக்ஷ்மி சரத்குமார் கடந்த வருடம் தனது காதலர் நிக்கோலை சச்தேவ் என்பவரை காதலித்து குடும்பத்தாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார்.
நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பை கேலரிஸ்ட் நிக்கோலாய் சச்தேவுக்கும் கடந்த வருடம் தாய்லாந்தின் கிராபியில் உள்ள கடற்கரை ரிசார்ட்டில் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின் பின்னரும் சினிமாவில் ஆர்வம் காட்டிவரும் இவர், தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகின்றார்.
இந்நிலையில் வரவரலக்ஷ்மி சரத்குமார் நீலநிற ட்ரெண்டிங் சேலையில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் கியூட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |