விசில் போடு! விஜய்க்கு நடிகை வரலட்சுமி சரத்குமார் வாழ்த்து
தமிழக சட்டசபைத் தேர்தலில் முதல் முறையாகப் போட்டியிட்டு, முன்னிலை வகிக்கும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிக்கு, நடிகை வரலட்சுமி சரத்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகை வரலட்சுமி
நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி சரத்குமார், கடந்த 2012-ம் ஆண்டு வெளியான 'போடா போடி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக கால்பதித்தார்.

அவரின் தனித்துவமான மற்றும் யதார்த்மான நடிப்பால் முதல் படமே சூப்பர் ஹிட் கொடுத்தால், அதனை தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.
ஹீரோயினாக மட்டுமன்றி வில்லி, குணச்சித்திரம் என தனக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்கள் கொண்ட கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

நடிகை வரட்சுமி சரத்குமார் மும்பையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களது திருமணம் கடந்த ஆண்டு வெகு விமர்சையாக தாய்லாந்தில் நடைபெற்றது.
திருமணதான பிறகும் அதே ஆர்வத்துடன் சினிமாவிலும் தொலைக்காட்சி நிகழ்சிகளிவும் ஈடுபாடு காட்டிவருகின்றார்.

இறுதியாக இவர் நடிப்பில் வெளியான சரஸ்வதி திரைப்படம் மக்கள் மத்தியில் அமோகவரவேற்பு பெற்றது.
வரலட்சுமி சரத்குமார் பதிவு

ஒரு விரல் புரட்சி..விசில் போடு…விஜய்….ஊஊஊஊஊஊ….மக்கள் தங்கள் தீர்ப்பை அளித்துவிட்டார்கள். பல தசாப்தங்களாக எத்தனையோ பேர் முயன்று பார்த்தார்கள்.
ஆனால், மக்கள் நினைத்தால், அதிகாரம் அவர்களிடமே இருக்கிறது என்பதை நீங்கள் நிரூபித்துக் காட்டியிருக்கிறீர்கள்.
நம் தமிழர்களின் வாழ்வில் மாற்றத்தையும் செழிப்பையும் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.என விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.