நடிகை வரலட்சுமிக்கு என்ன ஆச்சு? கையில் கட்டுடன் வெளியான காட்சி
நடிகை வரலட்சுமி கையில் கட்டுடன் இருக்கும் காணொளி வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகை வரலட்சுமி
சரத்குமாரின் மகள் வரலட்சுமி முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மதகஜராஜா படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
நடிகை வரலட்சுமி விக்னேஷ் சிவனின் போடா போடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமானார். பின்பு பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்.
மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் அவர் நடித்து வரும் இவர் கடந்த ஆண்டு நிகோலய் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர் ஏற்கனவே திருமணமாகியதுடன், இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இதனால் வரலட்சுமியின் திருமணம் சமூகவலைத்தளங்களில் பல விமர்சனங்களைப் பெற்றது.
இந்நிலையில் வரலட்சுமி கையில் கட்டுடன் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதனை அவதானித்த ரசிகர்கள் அதிர்ச்சியில் காணப்படுகின்றனர்.
அதாவது படப்பிடிப்பின் போது சிறிய சண்டை காட்சியில் இவரது கட்டை விரலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் குணமடைந்தவுடன் படப்பிடிப்பிடிப்பில் இணைந்துகொள்வேன் என்று கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |