ட்ரெண்டிங் பாடலுக்கு மணக்கோலத்தில் குத்தாட்டம் போட்ட வரலக்ஷ்மி சரத்குமார்.. கூட ஆடுறது யாரு தெரியுமா?
நடிகர் சரத்குமார் மகள் வரலக்ஷ்மி சரத்குமார் மணகோலத்தில் குத்தாட்டம் போடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
வரலக்ஷமி சரத்குமார்
நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான “ போடா போடி” என்ற படத்தில் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாகியவர் தான் நடிகை வரலக்ஷமி சரத்குமார்.
இதனை தொடர்ந்து இயக்குநர் பாலா இயக்கத்தில் ‘தாரை தப்பட்டை’ திரைப்படம் வரலட்சுமிக்கு மிக பெரிய புகழை தேடிக் கொடுத்தது.
பின்னர் பட வாய்ப்பு கூடிக் கொண்டு செல்ல என்ன கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறப்பாக நடிக்கக் கூடியவராக மாறி விட்டார்.
இதே வேளை பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு பெயரை வாங்கிக் கொண்டார்.
மணகோலத்தில் வெளியான காட்சி
இந்த நிலையில் சினிமாவில் எவ்வளவு பிஸியாக இருக்கிறாரோ அதே போல் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார்.
அந்த வகையில், மணக்கோலத்தில் சந்தோஷ் பிரதாப், பிரசாந்த் ரங்கசாமி உள்ளிட்டோருடன் இணைந்து “தாமரை பூவுக்கும் தண்ணீக்கும்..” பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.
திடீரென இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் வரலட்சுமிக்கு திருமணமா? என ரசிகர்கள் குழம்ப ஆரம்பித்து விட்டனர். வீடியோக்காட்சியை பார்த்த பின்னர் திரைப்பட ஷீட்டிங்கின் போது எடுக்கப்பட்ட ரீல்ஸ் என தெரியவந்துள்ளது.
மேலும் வீடியோக்காட்சியை பார்த்த இணையவாசிகள், “ இட்டிஸ் பிரசாந்த் எனப்படும் பிரசாந்த் ரங்கசாமி டான்ஸ் ஆடுவது தான் செம காமெடியாக உள்ளது” என ட்ரோல் செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |