கெட்ட கொழுப்புக்கு குட்டி தீர்வு- இந்த கஞ்சி தினமும் ஒரு கப் குடிங்க
பொதுவாக தற்போது இருக்கும் மோசமான பழக்கவழக்கங்கள் காரணமாக உடல் எடை வயதிக்கு அதிகமாக வளர்ந்து விடுகிறது.
இளம் பருவத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் அதிக உடல் பருமனும் ஒன்றாகும். அதற்காக தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடுவது, ஆரோக்கியமான உணவுகளை மட்டும் தேர்ந்தெடுத்து உண்பது போன்றவற்றை பின்பற்றுவது அவசியம்.
காலையில் சாப்பிடும் உணவு தான் ஒரு நாளில் தாக்கம் செலுத்துகிறது. இதனால் காலையுணவை ஆரோக்கியமாக எடுத்து கொள்ள வேண்டும்.
உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்ளலாம்.
அப்படியாயின், நவதானியங்களில் ஒன்றான வரகரிசியைக் கொண்டு கஞ்சி தயாரித்து குடிக்கலாம். இந்த கஞ்சியில் கொஞ்சமாக வெந்தயம் கலந்து குடித்து வந்தால் உடல் சூடும் கட்டுக்குள் வரும். ஆண்களை விட பெண்களுக்கு அதிகமான பலன்கள் கிடைக்கும்.
அந்த வகையில், வரகரிசியைக் கொண்டு கஞ்சி எப்படி தயாரிக்கலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
* வரகு - 1/2 கப் அல்லது 50 கிராம்
* பாசிப்பருப்பு - 1/2 கப் அல்லது 50 கிராம்
* நெய் - 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 7 பல் (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 6 கப்
* தேங்காய் - 2 பெரிய சில்லு
* மிளகு - 1/4 டீஸ்பூன்
தயாரிப்பு முறை
முதலில் வரகரிசி மற்றும் பாசிப்பயறு இரண்டையும் நன்றாக கழுவி 15-20 நிமிடம் ஊறவைக்கவும்.
பின்னர், அடுப்பில் ஒரு குக்கரை வைத்து அதில் கொஞ்சமாக நெய் விட்டு சூடானதும், பூண்டு மற்றும் வெந்தயம் இரண்டையும் ஒன்றாக போட்டு கொஞ்சமாக வதங்கவிடவும்.
வதங்கிய பின்னர் ஊற வைத்திருக்கும் வரகரிசி மற்றும் பாசிப்பயறு இரண்டையும் கொட்டி, 6 கப் அளவு தண்ணீர் சேர்த்து 1 விசில் விட்டு வேக வைக்கவும். அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
விசில் போனதும் குக்கரைத் திறந்து, கஞ்சியை கலந்து, கரண்டியால் பூண்டு மற்றும் வெந்தயத்தை மசித்து விடவும். கஞ்சி கிளறும் பொழுது கெட்டியாக இருந்தால், 1 கப் சுடுநீரை ஊற்றி கலந்து கொள்ளலாம்.
அதன் பின்னர் மிக்சியில் அரைத்து வைத்திருக்கும் தேங்காயை அரைத்து கஞ்சியில் ஊற்றி கலந்து விடவும். உரலில் 1/4 டீஸ்பூன் மிளகு சேர்த்து இடித்துக் கலந்து விட்டால் சுவையான வரகரிசி வெந்தய கஞ்சி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |