பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து அதிரடியாக வனிதா வெளியேறி விட்டரா? காட்டுத் தீயாய் பரவும் தகவல்! உண்மை என்ன?
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வனிதா வெளியேறி உள்ளதாக தகவல் ஒன்று வைரலாகி வருகின்றது.
இந்த தகவல் வெளியானதுமே நெட்டிசன்கள், அப்படியானால் இனி யார் கன்டென்ட் கொடுப்பது.
யார் சண்டை போடுவதை நாங்கள் பார்ப்பது என கேட்டு வருகின்றனர்.

முதல் வாரத்திலேயே வனிதாவிற்கு தான் குறைவான ஓட்டுக்கள் இருந்ததாகவும், அதனால் முதல் ஆளாக அவர் தான் வெளியேறுவார் என்றும் கூறப்பட்டது.
ஆனால் டிரெண்டிங் பிளேயர், கேப்டன் என பல காரணங்களைக் கூறி வனிதாவை காப்பாற்றி வந்தார் பிக்பாஸ்.
தற்போது பிக் பாஸில் இருந்து வனிதா வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றது.
இது எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை. இதேவேளை, நேரடியாக ஒளிபரப்பாகும் பிக் பாஸ் அல்டிமேட்டில் இது வரை அவர் வெளியேறுவது போல எதுவும் காண்பிக்கப்பட வில்லை.
