ஜோவிகாவை வாடகைக்கு தான் பிக்பாஸ் வீட்டுக்கு அனுப்பினேன்... வனிதா ஓபன் டாக்
நடிகை வனிதா விஜயகுமார் தனது மகள் ஜோவிகாவை வாடகைக்கு தான் பிக்பாஸ் வீட்டுக்கு அனுப்பியதாக சமீபத்தில் பேட்டியொன்றி குறிப்பிட்டுள்ள விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வனிதா விஜயகுமார்
தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான “சந்திரலேகா” படத்தில் மூலம் ஹீரோயினாக அறிமுமானவர் தான் வனிதா விஜயகுமார்.
அதனை தொடர்ந்து பெரியளவு படங்களில் நடிக்காமல் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிய வனிதா முதல் திருமணம் விவாகரத்தில் முடியவே, நீண்ட நாட்களுக்கு பின்னர் 3 திருமணங்கள் செய்து விட்டு சர்ச்சை நாயகியாகவே மாறினார்.
ஆனால் தற்போது சிங்கிளாக தனது 2 பெண்குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றார். சினிமா பிரேக் கொடுத்து விட்டு, சீரியல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பிஸியாக இருந்த வனிதா விஜயகுமார் அண்மையில் நாயகியாக மீண்டும் வெள்ளி திரையில் ரீஎன்றீ கொடுத்துள்ளார்.
இவரே இயக்கி Mrs & Mr எனும் படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் அண்மையில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.அந்த படத்தை வனிதாவின் மகள் ஜோவிகா தான் தயாரித்திருந்தார்.
வனிதா ஓபன் டாக்
இந்நிலையில் சமீபத்திய பேட்டியொன்றில் வனிதா விஜயகுமார் பேசுகையில், ஜோவிகாவை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள அனுப்பியது வாடகைக்காகத்தான் அவள் எனக்காக தான் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றாள்.
அதிலிருந்து சம்பாதித்த தொகையையும் அவள் எனக்காக செலவிட வேண்டும் என ஆசைப்பட்டார். இனால் தான் அந்த பணத்தை Mrs & Mr திரைப்பட தயாரிப்புக்கு பயன்படுத்தினார் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். குறித்த விடயம் தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
