3வது கணவரை பறிகொடுத்த வனிதா.. தொகுப்பாளர் கேள்விக்கு அதிரடியான பதில்
திருமணம் குறித்து தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு அதிரடியாக வனிதா விஜயகுமார் பதில் கொடுத்துள்ளார்.
வனிதா விஜயகுமார்
விஜயகுமாரின் மகளான வனிதா கோலிவுட்டில் சில படங்களில் கதாநாயகியாக நடித்தவர். அந்த வகையில், இவர் விஜய்யுடன் சந்திரலேகா படத்தில் நடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து சினிமாவில் இருந்து விலகி, ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.
ஆனால் வனிதாவின் திருமண வாழ்க்கை நிலைக்கவில்லை. மாறாக தொடர்ந்து 2 திருமணங்கள் செய்தார். அதுவும் பிரிவில் முடிந்தது.
இதற்கிடையில் நடன அமைப்பாளர் ராபர்ட் மாஸ்டரை காதலித்தார். அந்தக் காதலும் பாதியில் முடிந்தது. இதனால் வனிதா மீது தொடர்ந்து சர்ச்சையாகவே இருந்து வந்தார்.
நான்காவது திருமணம்
இந்த நிலையில் தற்போது நான்காவது திருமணம் குறித்து கேட்ட தொகுப்பாளருக்கு வனிதா கொடுத்த ரிப்ளை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அதாவது வனிதா சமீபத்தில் கொடுத்த பேட்டியொன்றில், "அடுத்த திருமணம் எப்போது செய்துகொள்வீர்கள்? உங்களுக்கு மாப்பிள்ளை கருப்பா வேணுமா? அல்லது வெள்ளையா வேணுமா? ” என கேட்டுள்ளார்.
அதற்கு வனிதா, “ மாப்பிள்ளை பச்சையாக இருந்தாலும் நான் திருமணம் செய்து கொள்வேன். அதிலும் குபேரன் மாதிரி இருக்க வேண்டும்.” என்றார்.
கடந்த வருடம் வனிதாவின் மூன்றாவது கணவர் உயிரிழந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |