வனிதா வீட்டில் நடந்த விசேஷம்! புடவையில் அடையாளம் தெரியாத அழகில் மகள்
வனிதா விஜயகுமார் ஏற்கெனவே பொட்டிக் கடையை திறந்துள்ள நிலையில் தற்போது புதிதாக ஸ்டுடியோவையும் திறந்துள்ளார்.
நடிகை வனிதா
விஜய் படத்தில் நடிகையாக அறிமுகமாகிய வனிதா சில படங்களில் நடித்து பிரபல நடிகையானார். இதற்கிடையே திருமணம் முடித்து பல சர்ச்சைகளில் சிக்கினார்.
பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். இவரது வெளிப்படையான பேச்சு பலருக்கும் பிடிக்காமல் போயுள்ளது.
தனது இரண்டு மகள்களுடன் வாழ்ந்துவரும் இவர் தனது பாதையில் பயங்கர வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றார்.
இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க! சிறுநீரக கோளாறு ஏற்படும் ஜாக்கிரதை
பொட்டிக் ஷாப்பை தொடர்ந்து ஸ்டூடியோ
இந்த நிலையில் கடந்த ஆண்டு பொட்டிக் ஷாப் ஒன்றை தொடங்கி பிசினஸ் செய்து வந்தார். இந்த கடையில் சினிமாவில் நடிப்பதற்கு ஆசைப்படுவோருக்கு போட்டோஷூட் நடத்திக் கொள்ள பிரத்யேக ஆடைகள் விற்கப்படுகின்றன.
தற்போது புதிதாக வனிதா விஜயகுமார் ஸ்டூடியோஸ் என்ற பெயரில் ஒன்றை தொடங்கியுள்ளார். அது சினிமா, சீரியலில் நடிப்பதற்காக போட்டோஷூட் எடுக்கப்படும் என்றும் மணப்பெண் அலங்காரம், பேஷன் ஸ்டைலிங் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும் என்றும் வனிதா கூறியுள்ளார்.
இந்த நிகழ்வுக்கு தாடி பாலாஜி, காயத்ரி ரகுராம், நடிகை ரேகா, சினேகன் அவரது மனைவி கன்னிகா உட்பட பலரும் வந்திருந்தனர். இதில் வனிதாவின் மூத்த பெண் புடவை அணிந்து அடையாளம் தெரியாத அழகில் காணப்பட்டது ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.