நடிகர் விஜய்யின் மடியில் இருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா? வனிதாவுக்கு இப்படியொரு உறவா?
நடிகர் விஜய் மடியில் உட்கார்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
நடிகர் விஜய்யின் திரைப்படங்கள் தற்போது வெளியாகாத நிலையில், இந்த ஊரடங்கு நேரத்தில் விஜய்யின் பழைய புகைப்படங்கள், நினைவுகளை அவரது ரசிகர்கள் வெளியிட்டு வருகிறார்கள்.
இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அந்தவகையில் இப்போது தளபதி விஜய், மடியில் ஒரு குழந்தையை தூக்கிவைத்துக்கொண்டு நிற்கும் புகைப்படம் வெளியாகி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்தக் குழந்தை வேறு யாரும் இல்லை. நம்ம பிக்பாஸ் பிரபலம் வனிதாவின் மகன் ஸ்ரீ ஹரிதான்.
சில வருடங்களுக்கு முன்னர், வனிதா வீட்டில் விசேஷம் ஒன்று நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில், தன் மனைவி சங்கீதாவுடன் கலந்து கொண்டார் நடிகர் விஜய். அப்போது, எடுத்த இந்த புகைப்படமே தற்போது வைரலாகி வருகிறது.