வனிதா விஜயக்குமார் மகன் ஸ்ரீஹரியா இது?... ஹீரோவை மிஞ்சிய ஹேண்ட்ஸம் புகைப்படம்
நடிகை வனிதாவின் மகன் ஸ்ரீஹரி ஹீரோ லுக்கில் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை வனிதா
தமிழ் திரையுலகில் சினிமா குடும்பத்தின் பின்புலத்தில் இருந்து வந்த நடிகை வனிதா தனது பெற்றோர், உறவினர்களை விட்டு பிரிந்து தனது இரண்டு பெண் குழந்தைகளையும் பார்த்து வருகின்றார்.
நடிகை வனிதா 2000ம் ஆண்டும் நடிகர் ஆகாஷை திருமணம் செய்த நிலையில் இவர்களுக்கு ஸ்ரீஹரி மற்றும் ஜோவிகா என்ற இரண்டு பிள்ளைகள் பிறந்தனர். ஆகாஷ் வனிதாவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார்.
இந்த இரு குழந்தைகளில் ஜோவிகா வனிதாவுடனும், ஸ்ரீஹரி தாத்தா விஜயகுமார் மற்றும் தந்தை ஆகாஷ் உடன் வாழ்ந்து வருகின்றார்.
ஹீரோவை மிஞ்சிய மகன்
சமீப காலமாக ஸ்ரீஹரி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் தற்போதும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதனை அவதானித்த ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
பாலிவுட் நடிகர் போன்று ஸ்ரீஹரி ஹேண்ட்ஸம் ஆக இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். முன்னணி நடிகர்களாக சீக்கிரம் வலம் வந்துவிடுவார் என்று ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.
ஆனால் ஸ்ரீஹரிக்கு நடிப்பில் ஆர்வம் இல்லாத நிலையில் இயக்குனர் ஆக வேண்டும் என்பதே லட்சியமாக இருப்பதாகவும், சில குறும்படங்களையும் இயக்கி வருகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |