வனிதா விஜயகுமார் கர்ப்பமா? இணையத்தில் புதிய புயலை கிளப்பும் வைரல் காணொளி!
வனிதா விஜயகுமார் கர்ப்பமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் அடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வெளியாகி புதிய புயலை கிளப்பி வருகின்றது.
வனிதா விஜயகுமார்
தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான தம்பதிகளான விஜயகுமார்-மஞ்சுளா ஆகியோரின் மகள் தான் வனிதா விஜயகுமார். இவர் தமிழ் சினிமாவில் நடித்தது சில படங்கள் என்றாலும் இவரின் பெயரை கேட்டாலே ரசிகர்கள் குஷியாகிவிடுகின்றனர்.
முதல் படமே தளபதியுடன் சந்திரலேகா எனும் திரைப்படத்தில் நடித்து பிரபலமாகியிருந்தார். திருமணத்துக்குப் பின்னர் நடிப்பை கைவிட்டார்.
முதலில், ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் பிறகு விவாகரத்து பெற்றார். அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் பிறந்தனர்.
அதன் பிறகு, ஆந்திராவை சேர்ந்த ராஜன் என்பவரை திருமணம் செய்தார். அதுவும் விவாகரத்தில் முடிந்தது. வனிதா விஜயகுமாருக்கும் ராஜன் என்பவருக்கும் ஒரு மகள் இருக்கிறார்.
பிறகு நடன இயக்குனர் ராபர்ட் உடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. கடைசியாக வனிதா பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அதன் பின் சில கருத்து வேறுபாடுகளால் இந்த திருமணத்தைில் இருந்தும் விவாகரத்து பெற்றார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் பீட்டர் பால் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
3 குழந்தைகளுக்கு தாயான வனிதா, தற்போது தனது மகள் ஜோவிகாவுடன் தனியாக வசித்து வருகிறார். அவ்வப்போது வனிதா மீது கிசுகிசுக்கள், சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருந்தாலும், விமர்சனங்களை தனது பதிலடி மூலம் சிறப்பாக கையாள்வதில் இவர் கில்லாடி என்பது அனைவரும் அறிந்ததே.
தற்போது ராபர்ட் மாஸ்டருடன் மிஸஸ் அண்ட் மிஸ்டர் வெப் தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது வனிதா விஜயகுமார் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பது போன்ற காணொளியை அவரே தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளி கமெண்டுட்களை பதிவிட்டு வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |