கையில் அரிவாளுடன் கோபமாக வனிதா வெளியிட்ட புகைப்படம்- இணையத்தில் வைரல்!
தமிழ் சினிமாவில் சந்திரலேகா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் வனிதா விஜயகுமார். ஒன்றுக்கு மூன்று திருமணம் செய்து மூன்றும் விவாகரத்தில் முடிந்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஹரி நாடார் தயாரித்த நடித்த டுகே காதல் அழகானது என்ற படத்தில் நடித்துள்ளார்.
இதனையடுத்து, பாம்பு சட்டை என்ற படத்தை இயக்கிய ஆதம் தாசன் ஹீரோயினை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். அப்படத்தில் கதாநாயகியாக வனிதா நடித்து வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் பிரசாந்த் நடித்து வரும் அந்தகன் படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், தற்போது வனிதா ஒரு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.
அதில் அருவா வைத்தபடி கெத்தாக இருப்பதுபோல் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள்தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் ரசிகர்கள் பல கமெண்ட்ஸ்களை தெறிக்க விடுகின்றனர்.

