வனிதா விஜயகுமார் இந்த தொழிலும் செய்கிறாரா? என்ன தொழில் தெரியுமா?
விஜயகுமாரின் மூத்த மகளான வனிதா விஜயகுமார் தனது சொந்த கடையின் மூலமாக அதாவது விவி ஸ்டைலிங் கடையின் மூலம் பல லட்சங்கள் சம்பாத்தித்து வருகிறார்.
வனிதா விஜயகுமார்
நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மூத்த மகளாவார். தளபதி விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் வனிதா விஜயகுமார்.
சர்ச்சைகளுக்கு பெயர் போனவர், 2000-ம் ஆண்டு நடிகர் ஆகாஷை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.
இதற்கு பின்னர் இந்த திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகள் ஏற்பட்டு, இரண்டாவதாக ஆனந்த் என்பரை திருமணம் செய்தார்.
இப்படியான சர்ச்சைகளுக்க மத்தியில் பிக்பாஸ் சீசன் 3 மூலம் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பிரபலமானார்.
விவி ஸ்டைலிங்
வனிதா விஜயகுமார் யூடியூப் சேனல் ஒன்றை வைத்து அதில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இது தவிர இவர் சொந்தமாக துணிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்த கடை சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ளது, விவி ஸ்டைலிங் என்ற பெயரில் இயங்கி வருகின்றது.
இங்கு ஆடைகள் மட்டுமல்லாமல் மேக்கப் பொருட்களும் சேர்த்து கிடைக்கின்றன. இந்த கடையில் உள்ள அனைத்து ஆடைகளும் வனிதாவே வடிவமைத்துளாளர்.
இவர் பேஷன் டெக்னாலஜியில் அட்வான்ஸ் டிப்ளமோ படித்துள்ளார் மற்றும் இவர் சில படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராகவும் இருந்துள்ளார்.
இந்த துணிக்கடையின் மூலம் பல லட்சக்கணக்கில் வனிதா சம்பாதித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |