லிப் லாக் புகைப்படத்தினை அனுப்பி வாழ்த்து கூறிய ரசிகர்: வனிதா கொடுத்த தரமான பதிலடி
நடிகை வனிதா சிலதினங்களுக்கு முன்பு தனது பிறந்தநாளை கொண்டாடி நிலையில் பிரபலங்கள், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பீட்டர் பாலுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
வனிதா விஜயகுமார் தன் பிறந்நதாளை துபாயில் கொண்டாடிய நிலையில், பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில் பீட்டர் பாலுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு சமூக வலைதளவாசி ஒருவர் வாழ்த்தினார்.
அன்பை நினைவூட்டியதற்கு நன்றி. அன்பு நீடிக்கும்போது அது அழகானது. உங்களின் அன்புக்கு மற்றவர் தகுதியில்லாதவர் என்று தெரியும்போது அல்லது சூழல் சரியில்லை என்றால் அங்கிருந்து விலகிச் செல்வது தான் சரியான விஷயம். அது உங்களை போன்றவருக்கு புரியாது என்றார்.

வனிதாவின் கமெண்ட்டை பார்த்த அந்த நபரோ, அவரின் கடந்த கால வாழ்க்கை புகைப்படங்களை வெளியிட்டார்.
வேலையும், வாழ்க்கையும் இல்லாமல் என் வாழ்க்கையை கவனித்துக் கொண்டிருக்கிறீர்கள். இருப்பினும் கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் என்றார்.
இதனை அவதானித்த ரசிகர்கள் வனிதாவிற்கு அட்வைஸ் செய்து வருகின்றனர். இம்மாதிரியான நபருக்கு ரிப்ளை எதற்காக அக்கா கொடுக்கிறீர்கள் என்று கூறி வருகின்றனர்.